ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி 20 கிரிக்கெட் உலகக் கோப்பை சூப்பர் 12 சுற்றில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி 4 ஆட்டங்களில் விளையாடி 3 வெற்றி, ஒரு தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்று குரூப் 2-ல் முதலிடத்தில் உள்ளது. இந்நிலையில் இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் இன்று ஜிம்பாப்வே அணியுடன் மெல்பர்ன் மைதானத்தில் மோதுகிறது.

Advertisement

அரை இறுதிக்கு முன்னேற வேண்டுமானால் இந்த ஆட்டத்தில் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற நெருக்கடியுடன் இந்திய அணி இருந்தது. ஆனால் தற்போது தென் ஆப்பிரிக்கா அணி நெதர்லாந்துடனான போட்டியில் தோல்வியடைந்து, தொடரிலிருந்து வெளியேறியுள்ளதால் இந்திய அணி நேரடியாக அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளது. இருப்பினும் இந்திய அணி இப்போட்டியில் வெற்றிபெற்று புள்ளிப்பட்டியளில் முதலிடத்தை தக்க வைக்க முனையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

இந்திய அணியைப் பொறுத்தவரையில், தொடக்க ஆட்டத்தில் விராட் கோலி வியக்கத்தக்க வகையில் விளையாடி 53 பந்துகளில் 82 ரன்கள் விளாசி அணியின் வெற்றிக்கு முக்கிய பங்களிப்பு செய்திருந்தார். அவரிடம் இருந்தும், சூர்யகுமார் யாதவிடம் இருந்து மேலும் ஒரு சிறந்த ஆட்டம் வெளிப்படக்கூடும். கேஎல்ராகுல், வங்கதேச அணிக்கு எதிராக அரை சதம் அடித்து பார்முக்கு திரும்பி இருப்பது டாப் ஆர்டர் பேட்டிங்கிற்கு வலுசேர்த்துள்ளது. 

கேப்டன் ரோஹித் சர்மாவிடம் இருந்து மட்டுமே இன்னும் பெரிய அளவிலான ஆட்டம் வெளிப்படவில்லை. நெதர்லாந்து அணிக்கு எதிராக 53 ரன்கள் விளாசிய அவர், மற்ற 3 ஆட்டங்களிலும் கூட்டாக 21 ரன்களே சேர்த்தார். அரை இறுதி சுற்றுக்கு தகுதி பெறுவதற்கு இன்றைய ஆட்டம் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால் ரோஹித் சர்மா பேட்டிங்கில் கூடுதல் பொறுப்புடன் செயல்படக்கூடும்.

ஜிம்பாப்வே அணியில் வலது கை பேட்ஸ்மேன்கள் அதிகம் இருப்பதால் இந்திய அணியில் அக்சர் படேல் நீக்கப்பட்டு தீபக் ஹூடா அல்லது யுவேந்திர சாஹல் சேர்க்கப்படக்கூடும். மெல்பர்ன் மைதானத்தின் சராசரி ரன் குவிப்பு 155 முதல் 160 ஆகும். எனினும் வலுவான பேட்டிங் வரிசையை கொண்டுள்ள இந்திய அணி முதலில் பேட் செய்யும் பட்சத்தில் 180 முதல் 200 ரன்கள் வரை சேர்க்க முயற்சிக்கக்கூடும்.

ஜிம்பாப்வே அணி அரை இறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை ஏற்கெனவே இழந்துவிட்டது. எனினும் அந்த அணி இந்தத் தொடரில் கவனத்தை ஈர்க்கக்கூடிய அளவில் விளையாடி உள்ளது. பாகிஸ்தான் அணியை ஒரு ரன் வித்தியாசத்தில் தோற்கடித்து அதிர்ச்சிகொடுத்திருந்தது. அதேவேளையில் 3 ரன் வித்தியாசத்தில் வங்கதேசத்திடம் தோல்வியும் கண்டிருந்தது. பேட்டிங்கில் சிகந்தர் ராஸா அதிரடியில் பலம் சேர்ப்பவராக உள்ளார். இந்திய பந்து வீச்சாளர்களுக்கு அவர், சற்று நெருக்கடி கொடுக்கக்கூடும்.

Advertisement

போட்டி தகவல்கள் 

மோதும் அணிகள் - இந்தியா vs ஜிம்பாப்வே
இடம் - மெல்போர்ன் கிரிக்கெட் மைதானம்
நேரம் - மதியம் 1.30 மணி

நேருக்கு நேர்

Advertisement

மோதிய போட்டிகள் - 07
இந்தியா - 05
ஜிம்பாப்வே - 02

உத்தேச லெவன்

இந்தியா – கேஎல் ராகுல், ரோஹித் சர்மா (கே), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக், அக்சர் படேல், ரவிச்சந்திரன் அஷ்வின், புவனேஷ்வர் குமார், முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங்.

Advertisement

ஜிம்பாப்வே – வெஸ்லி மாதேவெரே, கிரெய்க் எர்வின் (கே), ரெஜிஸ் சகாப்வா, சீன் வில்லியம்ஸ், சிக்கந்தர் ரஸா, மில்டன் ஷும்பா, ரியான் பர்ல், லூக் ஜாங்வே, டெண்டாய் சதாரா, ரிச்சர்ட் நகரவா, பிளசிங் முசரபானி.

ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்

விக்கெட் கீப்பர் - ரெஜிஸ் சகப்வா
பேட்டர்ஸ் - விராட் கோலி, கிரேக் எர்வின், ரோஹித் சர்மா
ஆல்-ரவுண்டர்கள் - சிக்கந்தர் ராஸா, சீன் வில்லியம்ஸ், ஹர்திக் பாண்டியா, வெஸ்லி மாதேவரே
பந்துவீச்சாளர்கள் - பிளசிங் முசரபானி, அர்ஷ்தீப் சிங், புவனேஷ்வர் குமார்

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News