ENGW vs INDW, 1st T20I: ஒருநாள் தோல்விக்கு பதிலடி கொடுக்க காத்திருக்கும் இந்தியா!
இந்திய மகளிர் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து அந்த அணிக்கெதிராக டெஸ்ட், ஒருநாள், டி20 தொடர்களில் விளையாடி வருகிறது.
இதில் ஒரே ஒருடெஸ்ட் போட்டி டிராவில் முடிந்த நிலையில், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என இங்கிலாந்து அணி கைப்பற்றியது.
இதையடுத்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இரு அணிகளும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டி நாட்டிங்ஹாமில் உள்ள கவுண்டி கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடக்கிறது.
இப்போட்டிக்கான ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணியில் ஷஃபாலி வர்மா, ஸ்மிருதி மந்தனா, ஜெமிமா ரோட்ரிக்ஸ் ஆகியோர் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
ஏற்கெனவே ஒருநாள் தொடரை இழந்துள்ள இந்திய மகளிர் அணி அதற்கு பதிலடி கொடுக்கும் முனைப்போடு இன்றைய போட்டியில் விளையாடும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
அதேசமயம் ஹீத்தர் நைட் தலைமையிலான இங்கிலாந்து அணியும் பேட்டிங், பந்துவீச்சு என சம பலத்துடன் இருப்பது, இப்போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது என்பதை காட்டுக்கிறது.
மேலும் இரு அணிகளும் கடைசியாக மோதிய 5 டி20 போட்டிகளில் மூன்றில் இங்கிலாந்தும், ஒன்றில் இந்தியாவும், ஒரு போட்டி முடிவின்றியும் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
போட்டி தகவகள்
- மோதும் அணிகள் - இந்தியா மகளிர் vs இங்கிலாந்து மகளிர்
- இடம் - கவுண்டி கிரிக்கெட் மைதானம், நாட்டிங்ஹாம்
- நேரம் - இரவு 11 மணி
- நேரலை - சோனி டென் 1