கடந்த வருடம் நடைபெற்ற ஆஸ்திரேலிய அணிக்கெதிரான தொடரில் டெஸ்ட், ஒருநாள், டி20 தொடர்களில் இந்திய அணிக்காக அறிமுகமானார் தமிழ்நாட்டைச் சேர்ந்த நடராஜன். இவர் ஐபிஎல் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடி வருகிறார். 

Advertisement

இந்நிலையில் முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக 2021 ஐபிஎல் போட்டியிலிருந்து விலகியனார். மேலும் அறுவை சிகிச்சை செய்த காரணத்தினால், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் மற்றும் இலங்கைக்கு எதிரான ஒருநாள், டி20 தொடர்களில் இந்திய அணியில் நடராஜன் இடம்பெறவில்லை.

Advertisement

இந்நிலையில், காயத்திலிருந்து மீண்டு வரும் நடராஜன், தென்னிந்தியவில் வளர்ந்து வரும் பிரபல நடிகர் யோகி பாபுவுடன் உரையாடி, நண்பர்களுடன் இணைந்து உணவு அருந்தியுள்ளார்கள். இந்தச் சந்திப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை இருவரும் சமூகவலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார்கள்.

 

இதுகுறித்து நடராஜன் தனது ட்விட்டர் பதிவில், நினைவில் கொள்ள வேண்டிய ஒரு நாள். நண்பரும் நடிகருமான யோகி பாபுவை சந்தித்ததில் பெரும் மகிழ்ச்சி என்ற பதிவிட்டு புகைப்படங்களை இணைத்துள்ளார். இவரது பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News