ஹர்மன்ப்ரீத் கவுருக்கு தடைவிதித்தது ஐசிசி!

Updated: Tue, Jul 25 2023 21:17 IST
Image Source: Google

இந்திய மகளிர் அணி வங்கதேசம் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வந்தது. 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 2-1 என இந்திய அணி வென்றது. 3 ஒருநாள் போட்டிகளில் கொண்ட தொடரில் 1-1 என இரு அணிகளும் சம நிலையில் இருந்தவேளையில் 3ஆவது போட்டியில் ஆட்டம் டிராவில் முடிந்தது. 

இந்தப் போட்டியில் இந்திய மகளிரணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் ஆட்டமிழந்த விதம் சர்ச்சையானது. நடுவர் எல்பிடபிள்யூ கொடுக்க அதிர்ச்சியான ஹர்மன்ப்ரீத் கவுர் ஸ்டம்பினை பேட்டால் அடித்தும் நடுவரிடம் பேட்டால் பட்டதெனவும் வாதிட்டும் சென்றார். பின்னர் போட்டி  முடிந்தப் பிறகு நடுவர்கள் தீர்ப்பு குறித்து தனது கருத்தினை வெளிப்படையாக தெரிவித்தார். 

ஹர்மன்ப்ரீத் கௌர் செயலுக்கு எதிர்ப்பும் ஆதரவும் எழுந்தன. அந்த காணொளியும் சமூக வலைதளங்களில் வைரலாகின. இந்நிலையில் ஐசிசி விதிகளை மீறியதால் இந்திய மகளிரணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌர் முதல் இரண்டு ஆசியப் போட்டிகளில் விளையாட தடை என்பதை ஐசிசி உறுதிப்படுத்தியுள்ளது. 

ஒரு டெஸ்ட் அல்லது 2 ஒருநாள் அல்லது 2 டி20 போட்டி இதில் எது முதலில் வருகிறதோ  அதில் ஹர்மன்ப்ரீத் விளையாடமாட்டார் என ஐசிசி தெரிவித்துள்ளது. ஸ்டம்பினை உடைப்பது லெவல் 2 விதி மீறலில் வரும். இதற்கு முன்பாக வங்கதேச வீரர் ஷகிப் அல் ஹாசன் 2021இல் செய்ததால் 3 போட்டிகளில் விளையாட முடியாமல் போனது. மேலும் அபராதத் தொகையும் செலுத்தினார். 

தற்போது இது உறுதியானதால் முதன்முதலாக மகளிர் வீராங்கனை ஒருவர் இப்படியான விதி மீறலில் ஈடுபட்டு தண்டனை பெற்றவராக ஹர்மன்ப்ரீத் கவுர் இருப்பது குறிப்பிடத்தக்கது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை