குடும்பத்துடன் இங்கிலாந்து டூருக்கு ரெடியான இந்திய அணி!

Updated: Tue, Jun 01 2021 22:00 IST
Indian Squad Set To Tour England With Families Tomorrow (Image Source: Google)

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி ஜூன் 18ஆம் தேதி இங்கிலாந்தின் சவுத்தாம்டன் மைதானத்தில் நடைபெறுகிறது. 

இப்போட்டிக்கான விராட் கோலி தலைமையிலான 24 பேர் கொண்ட இந்திய அணி கடந்த மே 15ஆம் தேதி முதல் மும்பையிலுள்ள பிசிசிஐ விடுதியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 

இந்நிலையில் நாளைய தினம் இந்திய அணி தனி விமானம் மூலம் இங்கிலாந்து செல்லவுள்ளது. அங்கு அவர்கள் மேலும் 10 நாள்கள் தனிமைப்படுத்தப்பட்டு, பின்னர் பயிற்சிக்கு அனுமதிக்கப்படவுள்ளனர். 

இதற்கிடையில் இங்கிலாந்து செல்லும் இந்திய அணி ஆகஸ்ட் மாதம் இங்கிலாந்து அணியுடனான 4 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இதனால் கிட்டத்தட்ட 4 மாதங்கள் இந்திய அணி இங்கிலாந்தில் இருக்க வேண்டியது அவசியமாகும். 

இதன் காரணமாக இந்திய அணி வீரர்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் இங்கிலாந்துக்கு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதன்படி நாளைய தின குடும்ப உறுப்பினர்களுடன் இந்திய அணி வீரர்கள் இங்கிலாந்து செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை