இந்திய அணி வீரர்களுக்கு சம்பள உயர்வு; பிசிசிஐ தரப்பில் வெளியான தகவல்!

Updated: Tue, Feb 27 2024 15:58 IST
Image Source: Google

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்ற நிலையில், அடுத்தடுத்து நடைபெற்ற மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இந்த வெற்றியின் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது. 

இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மார்ச் 7ஆம் தேதி தர்மசாலாவில் உள்ள ஹிமாச்சால பிரதேச கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெறவுள்ளது. ஏற்கெனவே இங்கிலாந்து அணி இத்தொடரை இழந்துள்ளதால், இப்போட்டியில் வெற்றிபெற்று அறுதலை தேடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம் இந்திய அணியும் தொடரை வெற்றியுடன் முடிக்க ஆர்வம் காட்டும் என்பதால் இப்போட்டியின் மீதார் ஏதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. 

இந்நிலையில் இந்த டெஸ்ட் தொடரில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் இந்திய அணி வீரர்களுக்கு சம்பளம் மட்டுமின்றி போனஸ் தொகையும் வழங்க பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி இனி வரும் டெஸ்ட் தொடர்களில் இடம் பெற்று விளையாடும் வீரர்களுக்கும் போன்ஸ் வழங்க பிசிசிஐ முடிவு செய்துள்ளது.

 

தற்போதுள்ள பிசிசிஐ வீரர்கள் ஒப்பந்த பட்டியளின் படி வீரர்களுக்கு  ஒரு டெஸ்ட் போட்டிக்கு ரூ.15 லட்சமும், ஒருநாள் போட்டிக்கு ரூ.6 லட்சம், டி20 போட்டிக்கு ரூ.3 லட்சம் என்று சமபளம் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பிசிசிஐயின் இந்த அறிவிப்பால் இனி வரும் டெஸ்ட் தொடர்களில் சம்பளம் மட்டுமின்றி வருட கடைசியில் போனஸ் தொகையும் வீரர்களுக்கு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை