சாம்பியன்ஸ் கோப்பை 2024: இந்திய அணியை அறிவிப்பதில் தாமதம்!
ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நடைபெறவுள்ளது. புள்ளிப்பட்டியளின் டாப் 8 இடங்களைப் பிடிக்கும் அணிகள் நேருக்கு நேர் பலப்பரீட்சை நடத்தவுள்ளதால் இத்தொடரின் மீதான எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மாத்தியில் அதிகரித்துள்ளன. அதன்படி சாம்பியன்ஸ் கோப்பை தொடரானது எதிர்வரும் பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கி மார்ச் 9ஆம் தேதி வரை பாகிஸ்தானில் நடைபெறவுள்ளது.
இதில் இந்தியா - பாகிஸ்தான் இடையே இருக்கும் அரசியல் சூழ்நிலை காரணமாக இந்திய அணியும் பாகிஸ்தானுக்கு சென்று விளையாட மறுத்ததன் காரணமாக இத்தொடரானது ஹைபிரிட் மாடலில் நடைபெறவுள்ளது. அந்தவகையில் இத்தொடரில் இந்திய அணி பங்கேற்கும் போட்டிகள் மட்டும் துபாயில் நடைபெறவுள்ளது. இதில் குரூப் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து மற்று வங்கதேச அணிகளும், பி பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகளும் இடம்பிடித்துள்ளன.
இதில் சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் பங்கேற்கும் இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மற்ற நாட்டு கிரிக்கெட் வாரியங்களும் இத்தொடருக்கான அணியை தேர்வு செய்யும் பணியில் இறங்கியுள்ளனர். மேற்கொண்டு இத்தொடரில் பங்கேற்கும் அணிகளை அறிவிக்க நாளையே (ஜனவரி12) கடைசி நாள் என்பதால் அனைத்து அணிகளும் அதற்கான பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர். அதிலும் குறிப்பாக நடப்பு சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான இந்திய அணி குறித்த எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது.
ஏனெனில் இத்தொடருக்கான இந்திய அணியில் யார் யார் இடம்பிடிப்பார்கள், அணியின் கேப்டனாக யார் செயல்படுவார், ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி ஆகியோர் விளையாடுவார்களா, சஞ்சு சாம்சனுக்கு இந்திய ஒருநாள் அணியில் வாய்ப்பு கிடைக்குமா என்ற பல்வேறு கேள்விகள் ரசிகர்கள் மனதில் எழுந்துவருகிறது. இந்நிலையில் இத்தொடருக்கான இந்திய அணியை அறிவிக்க பிசிசிஐ கால அவகாசம் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரை காரணம் காட்டி, எதிர்வரும் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான அணியை அறிவிப்பதற்கு கூடுதலாக ஒருவார காலம் பிசிசிஐ அவகாசம் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. அந்தவகையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்கும் இந்திய அணியை அறிவிக்கும் போதே சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான அணியையும் அறிவிக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Also Read: Funding To Save Test Cricket
இருப்பினும் இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடும் இந்திய அணி இன்னும் சில தினங்களில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பின் ஜனவரிம் 19ஆம் தேதி இங்கிலாந்து ஒருநாள் மற்றும் சாம்பியன்ஸ் கோப்பை தொடர்களுக்கான அணியை அறிவிக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. ஆனால் இதற்கு ஐசிசி தரப்பில் என்ன முடிவு எடுக்கப்படும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.