தொடர்ந்து புறக்கணிக்கப்படும் பிரித்வி ஷா; ட்விட்டரில் கொந்தளிக்கும் ரசிகர்கள்!

Updated: Tue, Nov 01 2022 10:26 IST
India's squad for NZ, BAN: Chief selector Chetan Sharma clears air about non-selection of Shaw, Sarf (Image Source: Google)

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கு பிறகு நியூசிலாந்து செல்லும் இந்திய கிரிக்கெட் அணி, அங்கு மூன்று டி20 போட்டிகள் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது. நவம்பர் 18ஆம் தேதி தொடங்கும் இந்த தொடர், நவம்பர் 30ஆம் தேதி வரை நடைபெற உள்ள நிலையில், நியூசிலாந்து அணியுடனான டி20 தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ நேற்று அறிவித்துள்ளது.

இதில் ரோஹித் சர்மா, விராட் கோலி என சீனியர் வீரர்கள் பலருக்கு நியூசிலாந்து தொடரில் இருந்து ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதால், ஹர்திக் பாண்டியா டி20 தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அதிரடி வீரர் ரிஷப் பந்த் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

அதேபோல் ஷுப்மன் கில், இஷான் கிஷன், தீபக் ஹூடா, சூர்யகுமார் யாதவ், ஸ்ரேயஸ் ஐயர், சஞ்சு சாம்சன் ஆகியோர் நியூசிலாந்து அணியுடனான டி20 தொடருக்கான இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் வரிசையில் இடம்பெற்றுள்ளனர்.

மேலும் வாஷிங்டன் சுந்தர், யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், ஹர்சல் பட்டேல், முகமது சிராஜ், புவனேஷ்வர் குமார் மற்றும் உம்ரன் மாலிக் ஆகியோரும் நியூசிலாந்து அணியுடனான டி.20 தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற்றுள்ளனர்.

நியூசிலாந்து தொடருக்கான இந்திய அணியில், இளம் வீரர்கள் பலருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டிருந்தாலும், உள்ளூர் தொடர்களில் மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் பிரித்வி ஷா, மீண்டும் ஒருமுறை இந்திய அணியில் இருந்து புறக்கணிக்கப்பட்டுள்ளது ரசிகர்கள் மத்தியில் விரக்தியை ஏற்படுத்தியுள்ளது.

 

சையத் முஷ்டாக் அலி தொடர் உள்பட சமீபத்தில் நடைபெற்ற அனைத்து உள்ளூர் தொடர்களிலும் மிக மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் பிரித்வி ஷா காரணமே இல்லாமல் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவது ஏற்புடையது அல்ல என ரசிகர்கள் சமூக வலைதளங்கள் மூலம் இந்திய அணியை சாடி வருகின்றனர்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை