சர்ச்சையில் சிக்கிய இந்தூர் பிட்ச்; ஐசிசியின் நடவடிக்கை பாயுமா?

Updated: Thu, Mar 02 2023 11:31 IST
Image Source: Google

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 3ஆவது டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. இந்தூரில் உள்ள ஹோல்கர் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் இந்திய அணி டாஸில் வென்றும் தோல்வி நிலைக்கு சென்றுவிட்டது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் முன்னணி வீரர்கள் அனைவருமே அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுக்க வெறும் 109 ரன்களுக்கெல்லாம் ஆல் அவுட்டானது. இதற்கெல்லாம் காரணம் பிட்ச் தந்த ட்விஸ்ட் தான்.

ஹோல்கர் மைதானத்தில் சிகப்பு மண் இருப்பதால் முதல் 2 நாட்களுக்கு அதிக பவுன்ஸ் இருக்கும் என்று தான் எண்ணினர். ஆனால் அதற்கு நேர்மாறாக படு மோசமாக டேர்ன் ஆனது. குறிப்பாக நாதன் லியோன் 8.3 டிகிரி அளவிற்கு திரும்பியதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். எதிர்பார்த்தத்தில் 50 சதவீதம் கூட பந்து பவுன்ஸ் ஆகவில்லை. இதனால் முதல்நாளிலேயே இந்தியா ஆல் அவுட்டாகியும், ஆஸ்திரேலியா 4 விக்கெட்களையும் இழந்துவிட்டது.

இந்திய களங்களில் பொதுவாக 3ஆவது நாளில் இருந்து தான் பந்து டேர்ன் ஆக தொடங்கும். ஆனால் இங்கு போட்டி தொடங்கிய 30 நிமிடங்களுக்குள் அப்படி நடந்துவிட்டது. இதனால் முந்தைய 2 போட்டிகளை போலவே இந்த போட்டியும் 3 நாட்களுக்குள் முடிந்துவிடும் எனத்தெரிகிறது. இந்நிலையில் பிட்ச் மீது ஐசிசி நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த போட்டியை நன்கு கவனித்து வரும் ஐசிசி நடுவர் கிறிஸ் போர்ட், பிட்ச் மோசமாக இருந்ததாக ஐசிசி- நிர்வாகத்திற்கு தகவல் கொடுத்துவிட்டதாக தெரிகிறது. இதனால் ஹோல்கர் மைதானத்திற்கு படுமோசமான பிட்ச் என்ற ஸ்டாரை ஐசிசி கொடுக்கவுள்ளது. ஏற்கனவே முதல் 2 போட்டிகள் நடந்த நாக்பூர் மற்றும் டெல்லி களங்கள் மீது குற்றச்சாட்டுக்கள் உள்ள சூழலில் மீண்டும் வெடித்துள்ளது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை