INDW vs ENGW : டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு!

Updated: Thu, Jun 10 2021 15:42 IST
INDW vs ENGW : England Women have announced a 17-member squad (Image Source: Google)

இந்திய மகளிர் அணி 7 ஆண்டுகளுக்கு பிறகு இங்கிலாந்து அணியுடன் டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ளது. இப்போட்டி ஜூன் 16ஆம் தேதி இங்கிலாந்தில் பிரிஸ்டோவில் நடைபெறவுள்ளது. 

மேலும் ஒரு டெஸ்ட், மூன்று ஒருநாள், மூன்று டி20 போட்டிகளுக்கான இந்திய அணி ஏற்கெனவே அறிவிக்கப்பட்டு கடந்த ஜூன் 2ஆம் தேதி தனி விமானம் மூலம் இங்கிலாந்து சென்றடைந்தது.

இந்நிலையில் இந்தியாவுடனான டெஸ்ட் போட்டிக்கான 16 பேர் அடங்கிய இங்கிலாந்து மகளிர் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹீத்தர் நைட் தலைமையிலான இங்கிலாந்து மகளிர் டெஸ்ட் அணியில் அறிமுக வீராங்கனையாக எமிலி அர்லோட் சேர்க்கப்பட்டுள்ளார். உள்ளூர் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் மூலம் இவருக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

 

இங்கிலாந்து மகளிர் டெஸ்ட் அணி: ஹீத்தர் நைட் (கே), எமிலி அர்லோட், டாமி பியூமண்ட், கேத்ரின் ப்ரண்ட், கேட் கிராஸ், ஃப்ரேயா டேவிஸ், சோபியா டங்க்லி, சோஃபி எக்லெஸ்டோன், ஜார்ஜியா எல்விஸ், டாஷ் ஃபாரன்ட், சாரா க்ளென், ஏமி ஜோன்ஸ், நாட் ஸ்கைவர், அன்யா ஷ்ரூப்சோல், மேடி வில்லியர்ஸ், ஃபிரான் வில்சன் , லாரன் வின்ஃபீல்ட்-ஹில்
 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை