ஐபிஎல் 2021: அமீரகம் வந்தடைந்த சிஎஸ்கே, மும்பை இந்தியன்ஸ் வீரர்கள்!
கரோனா அச்சுறுத்தல் காரணமாக பாதியிலேயே ஒத்திவைக்கப்பட்ட ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன், தற்போது மீண்டும் அமீரகத்தில் நாளை மறுநாள் முதல் தொடங்கவுள்ளது.
அதிலும் நாளை மறுநாள் நடைபெறும் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் விளையாடி வந்த வீரர்கள் தற்போது அமீரகம் வந்தடைந்துள்ளனர். அதன்படி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைச் சேர்ந்த ஃபாஃப் டூ பிளேசிஸ், டுவைன் பிராவோ, இம்ரான் தாஹிர், மும்பை அணியைச் சேர்ந்த கீரேன் பொல்லார்ட், சன்ரைசர்ஸ் அணியைச் சேர்ந்த ஜேசன் ஹோல்டர், ரூதர்ஃபோர்ட் ஆகியோர் தங்கள் அணியில் இணைந்துள்ளனர்.
Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021
ஏற்கெனவே இவர்கள் பயோபபுள் சூழலில் இருந்ததால், நேரடியாக சக வீரர்களுடன் பபுளுக்குள் இணைந்துள்ளனர்.