இந்தியாவில் இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன் கரோனா பரவல் காரணமாக பாதியில் நிறுத்தப்பட்டது. மொத்தம் 60 போட்டிகள் கொண்ட இத்தொடரில் 29 போட்டிகள் மட்டுமே நடைபெற்றன. அதனால் எஞ்சிய 31 போட்டிகளை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தவுள்ளதாக பிசிசிஐ அறிவித்தது. 

Advertisement

இந்த நிலையில், நடப்பு ஐபிஎல் தொடரில் கடந்த மே மாதம் 2ஆம் தேதி நடந்த போட்டியின்போது இரண்டு சூதாட்ட தரகர்களை மைதானத்துக்குள் நுழைய சிறப்பு அனுமதி வழங்கி ஏற்பாடு செய்து கொடுத்ததாக, டெல்லி கிரிக்கெட் சங்கத்தின் பாலம் சிங், வீரேந்தர் சிங் ஷா ஆகியோர் டெல்லி காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

Advertisement

மனிஷ் கன்சல் மற்றும் க்ரிஷன் கார்க் ஆகிய இரு நபர்களுக்கு ஐபிஎல் போட்டியை பார்க்க அனுமதிக்கும் சிறப்பு அங்கீகார அட்டைகள் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இவர்கள் இருவரும் ராஜஸ்தான் ராயல்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் இடையேயான போட்டி குறித்த தகவல்களை பகிர்ந்ததற்காக ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து டெல்லி கிரிக்கெட் சங்க தலைவர் ரோஹன் ஜெட்லி கூறுகையில் ‘சம்பந்தப்பட்ட நபர் ஏற்கனவே இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதில் யார் ஈடுபட்டிருந்தாலும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இதுதொடர்பாக காவல்துறை நடத்தி வரும் விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்கப்படும்’ என தெரிவித்துள்ளார். 

ஏற்கெனவே சில கடந்த 2012ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் போது ஐபிஎல் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் உள்பட மூன்று பேருக்கு 7 ஆண்டுகள் தடையும், சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அகிய அணிகளுக்கு இரண்டு ஆண்டுகள் தடையும் விதிக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில் நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் சூதாட்டத்துக்கு உதவியதாக டெல்லி கிரிக்கெட் சங்க அலுவலர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News