ஐபிஎல் 2021: டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி பீல்டிங் தேர்வு!
இந்தியாவின் உள்ளூர் கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் 14ஆவது சீசன் ரசிகர்களை எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துவருகிறது.
இந்நிலையில் மும்பை வான்கேடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் 11ஆவது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி, பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்கொள்ளவுள்ளது.
இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி கேப்டன் ரிஷப் பந்த் முதலில் பந்துவீச தீர்மானித்துள்ளார்.
பஞ்சாப் கிங்ஸ்: கே.எல்.ராகுல், மயங்க் அகர்வால், கிறிஸ் கெயில், நிகோலஸ் பூரன்/ டேவிட் மாலன், தீபக் ஹூடா, ஷாருக் கான், ஜெய் ரிச்சர்ட்சன், ரிலே மெரிடித், அர்ஷ்தீப் சிங், முகமது சமி, ஜலஜ் சக்சேனா.
டெல்லி கேப்பிட்டல்ஸ்: ஷிகர் தவான், பிரித்வி ஷா, ஸ்டீவ் ஸ்மித், அஜிங்கியா ரஹானே, ரிஷப் பந்த், மார்கஸ் ஸ்டோய்னிஸ், கிறிஸ் வோக்ஸ், ரவிச்சந்திரன் அஸ்வின், லலித் யாதவ், ககிசோ ரபாடா, ஆவேஷ் கான்.