ஐபிஎல் 2021: ராய், வில்லியம்சன் அதிரடியில் ஹைதராபாத் வெற்றி!

Updated: Mon, Sep 27 2021 23:01 IST
IPL 2021: Hyderabad record their second win of the season (Image Source: Google)

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற 40ஆவது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. 

இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் சஞ்சு சாம்சனின் அதிரடியான ஆட்டத்தினால் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்களைச் சேர்த்தது.

இதில் அதிரடியாக விளையாடிய சஞ்சு சாம்சன் 82 ரன்களைச் சேர்த்தார். ஹைதராபாத் அணி தரப்பில் சித்தார்த் கவுல் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். 

இதையடுத்து இலக்கைத் துரத்திய ஹைதராபாத் அணிக்கு ஜேசன் ராய் அதிரடியானத் தொடக்கத்தை தந்தார். இதில் விருத்திமான் சஹா 18 ரன்களில் ஆட்டமிழக்க, மறுமுனையில் அதிரடியில் மிரட்டிய ஜேசன் ராய் அரைசதம் கடந்து அசத்தினார். 

அவருடன் இணைந்து விளையாடிய கேப்டன் கேன் வில்லியம்சனும் சிறப்பாக விளையாட ஹைதராபாத் அணியின் வெற்றி உறுதியானது. பின் ஜேசன் ராய் 60 ரன்களில் ஆட்டமிழக்க, இறுதிவரை விளையாடிய வில்லியம்சன் அரைசதம் அடித்து அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தார். 

Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021

இதன்மூலம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 18.3 ஓவர்களில் இலக்கை எட்டி, 7 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை