விரைவில் களமிறங்குவேன் - வில்லியம்சன் நம்பிக்கை

Updated: Sat, Apr 17 2021 11:54 IST
Image Source: Google

ஐபிஎல் தொடரில் சன் ரைசரஸ் அணியின் முக்கிய வீரராகவும், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாகவும் கேன் வில்லயம்சன். இவர் காயம் காரணமாக  முதல் இரண்டு போட்டிகளில் இவர் அணியில் இடம்பெறாத நிலையில், மிடில் ஆர்டரில் தவித்து வந்த சன்ரைசர்ஸ் அணி அடுத்தடுத்து தோல்வியைத் தழுவியது. இதையடுத்து அணியின் பேட்டிங் வரிசையை வலுப்படுத்த வில்லியம்சனின் வருகை மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்நிலையில் தனது கம்பேக் குறித்து பேசிய வில்லியம்சன் ”வலி குறைந்து காயம் விரைவில் குணமாக வேண்டும் என்பதில் கவனமாக உள்ளேன். ஒரு வாரத்துக்குள் முற்றிலும் குணமடைந்து அணிக்குத் திரும்புவேன் என நம்புகிறேன்.

பயிற்சியும் புத்துணர்ச்சியும் சமநிலையில் பெற்று வருகிறேன். உடலில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் விரைவில் உடல் தகுதியுடன் களமிறங்குவேன்” எனக் கூறியுள்ளார்.

முன்னதாக, காயம் காரணமாக சொந்த மண்ணில் நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற ஒரு நாள் தொடரில் வில்லியம்சன் பங்கேற்கவில்லை. தொடர்ந்து தற்போது ஐபிஎல் தொடரில் முதல் இரண்டு போட்டிகளிலும் களமிறங்காத இவர், விரைவில் அணிக்குத் திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

சன் ரைசரஸ் அணி தனது அடுத்த போட்டியில் மும்பை இந்தியனஸ் அணியை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டி சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு  நடைபெறுகிறது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை