ஐபிஎல் 2021: டாஸ்  வென்ற கேகேஆர் அணி பந்துவீச்சு!

Updated: Tue, Apr 13 2021 19:25 IST
IPL 2021: KKR won the toss and choose to bowl (Image Source: Google)

ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன் கடந்த வெள்ளிக்கிழமை (ஏப்.9) சென்னையில் ரசிகர்களின்றி தொடங்கியது.
 
இந்நிலையில், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் இன்றைய லீக் போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முதலில் மும்பை இந்தியன்ஸ் அணியை பேட்டிங் செய்ய அழைத்துள்ளது.

இன்றைய போட்டிக்கான மும்பை அணியில் கிறிஸ் லின்னிற்கு பதிலாக குயின்டன் டி காக் சேர்க்கப்பட்டுள்ளார். அதேசமயம் கேகேஆர் அணி மாற்றங்களின்றி இன்றைய போட்டியில் களமிறங்குகிறது.

மும்பை இந்தியன்ஸ்: ரோஹித் சர்மா, டி காக், சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷான், ஹர்திக் பாண்டியா, பொல்லார்ட், குர்னால் பாண்டியா, ராகுல் சஹார், மார்கோ ஜன்சென், ட்ரெண்ட் போல்ட், ஜஸ்பிரித் பும்ரா.

கேகேஆர்: நிதிஷ் ராணா, சுப்மன் கில், ராகுல் திரிபாதி, ஈயான் மோர்கன், ஆண்ட்ரே ரஸ்ஸல், தினேஷ் கார்த்திக், ஷகிப் அல் ஹசன்/ சுனில் நரைன், பாட் கம்மின்ஸ், ஹர்பஜன் சிங், பிரஷித் கிருஷ்ணா, வருண் சக்ரவர்த்தி.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை