ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்று வரும் 51ஆவது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்திவருகின்றன.
Advertisement
இப்போட்டியில் முதலில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய ராஜஸ்தான் அணிக்கு ஜெய்ஸ்வால் - லூயிஸ் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தது.
Advertisement
இதில் 12 ரன்களில் ஜெய்ஸ்வால் ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து 24 ரன்களில் லூயிஸும் நடையைக் கட்டினார். அடுத்து வந்த சாம்சன், தூபே, பிலீப்ஸ், மில்லர் என வரிசையாக சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.
இதனால் 20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 90 ரன்களை மட்டுமே சேர்த்தது. மும்பை அணி தரப்பில் நாதன் குல்டர் நைல் 4 விக்கெட்டுகளையும், ஜேம்ஸ் நீஷம் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.