ஐபிஎல் திருவிழா 2021: பஞ்சாப் கிங்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு போட்டி முன்னோட்டம், ஃபேண்டஸி லெவன் குறிப்பு!

Updated: Fri, Apr 30 2021 13:04 IST
IPL 2021, PBKS vs RCB – Blitzpools Fantasy XI Tips, Prediction & Pitch Report (Image Source: Google)

ஐபிஎல்  தொடரின் 14ஆவது சீசன் ஏப்ரல் ஒன்பதாம் தேதி தொடங்கி, ஏறத்தாழ முதல் சுற்றை நிறைவு செய்ய உள்ளது. இதில் இன்று நடைபெறும் 26 ஆவது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிகொள்கிறது. 

போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் : பஞ்சாப் கிங்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு
  • இடம்: நரேந்திர மோடி விளையாட்டரங்கம், அகமதாபாத்.
  • நேரம்: இரவு 7.30 மணி

போட்டி முன்னோட்டம்

நடப்பாண்டு ஐபிஎல் தொடரில்  இரு அணிகளும் இதுவரை 6 ஆட்டங்களில் விளையாடி உள்ள நிலையில், பஞ்சாப் 2 வெற்றிகளும், பெங்களூர் 5 வெற்றிகளும் பெற்றுள்ளன.

பஞ்சாப் அணியை பொறுத்தவரை, முந்தைய ஆட்டத்தில் கொல்கத்தா விடம் தோல்வி கண்டுள்ளது. தற்போது நல்லதொரு ஃபார்மில் இருக்கும் பெங்களூரை இந்த ஆட்டத்தில் சந்திப்பது பஞ்சாப் அணிக்கு சவாலாக இருக்கும். பஞ்சாப்பை பொருத்தவரை, கேப்டன் கே.எல்.ராகுல் நன்றாக விளையாடினாலும் மயாங்க் அகர்வால் அந்தளவுக்கு ஒத்துழைப்பு கொடுப்பதில்லை.

மோசமாக விளையாடும் நிகோலஸ் பூரனுக்கு பதிலாக டி20யில் நம்பர் 1 பேட்ஸ்மேனாக இருக்கும் டேவிட் மலானை ஏன் பஞ்சாப் இன்னும் களமிறக்காமல் இருக்கிறது என்பது மிகப்பெரிய கேள்வியாக இருக்கிறது. மேலும் அந்த அணிக்கு இறுதியாக பேட்டிங்கில் இருக்கும் மற்றொரு ஆறுதல் ஷாருக்கான். பவுலிங்கில் முகமது ஷமியை பெரிதும் நம்பி களமிறங்குகிறது பஞ்சாப் கிங்ஸ் அணி.

பெங்களூரைப் பொறுத்தவரை, பேட்டிங், பவுலிங் என எல்லா விதத்திலும் சிறப்பாகச் செயல்படுகிறது. நடப்பு சீசனில் இதுவரை ஒரே ஒரு தோல்வியை மட்டும் சந்தித்து கோப்பைக் கனவுடன் முனைப்பு காட்டுகிறது. டி வில்லியர்ஸ் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக தொடர்கிறார். கோலி சற்று சறுக்கினாலும், தேவ்தத் படிக்கல், மேக்ஸ்வெல் ஆகியோர் ரன்கள் சேர்க்கின்றனர். கடந்த ஆட்டத்தில் ரஜத் படிதாரும் சிறப்பாக செயல்பட்டார்.

பவுலிங்கை பொறுத்தவரை ஹர்ஷல் பட்டேல், முகமது சிராஜும் விக்கெட்டுகளை வீழ்த்துகின்றனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வாஷிங்டன் சுந்தர் பெரியளவில் சோபிக்காதது சற்றே பெங்களூருக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. 

நேருக்கு நேர்

ஐபிஎல் தொடரில் இவ்விரு அணிகளும் இதுவரை 26 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் பஞ்சப் கிங்ஸ் அணி 14 முறையும், ஆர்சிபி 12 முறையும் வெற்றி பெற்றுள்ளது. 
உத்தேச அணி

பஞ்சாப் கிங்ஸ் - கே.எல்.ராகுல், மயாங்க் அகர்வால், கிறிஸ் கெய்ல் / டேவிட் மாலன், தீபக் ஹூடா, நிக்கோலஸ் பூரன், மொய்சஸ் ஹென்ரிக்ஸ், ஷாருக் கான், கிறிஸ் ஜோர்டான், முகமது ஷமி, ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங்

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - விராட் கோலி, தேவ்தத் பாடிக்கல், ரஜத் படிதர், கிளென் மேக்ஸ்வெல், ஏபி டிவில்லியர்ஸ், வாஷிங்டன் சுந்தர், டேனியல் சாம்ஸ், கைல் ஜேமீசன், ஹர்ஷல் படேல், யுஸ்வேந்திர சாஹல், முகமது சிராஜ்.

பிளிட்ஸ்பூல் ஃபேண்டஸி லெவன்

  • விக்கெட் கீப்பர்கள் - கே.எல். ராகுல் (VC),டி வில்லியர்ஸ்
  • பேட்ஸ்மேன்கள் - கிளென் மேக்ஸ்வெல், விராட் கோலி (C), மயாங்க் அகர்வால், ராஜத் படிதர்
  • ஆல்ரவுண்டர்கள் - தீபக் ஹூடா, டேனியல் சாம்ஸ்
  • பந்து வீச்சாளர்கள் - ஹர்ஷல் படேல், முகமது சிராஜ், ரவி பிஷ்னோய்

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை