ஐபிஎல் 2021: விண்டீஸ் அதிரடி வீரர்களை அணிக்கு இழுத்த ராஜஸ்தான்!

Updated: Wed, Sep 01 2021 09:43 IST
Image Source: Google

கரோனா தொற்று காரணமாக பாதியிலேயே ஒத்திவைக்கப்பட்டிருந்த 14ஆவது சீசன் ஐபிஎல் தொடரின் எஞ்சியுள்ள போட்டிகள், செப்டம்பர் 19ஆம் தேதி முதல் அமீரகத்தில் தொடங்கவுள்ளது. இப்போட்டிக்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன. 

இந்நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியைச் சேர்ந்த இங்கிலாந்து வீரர்கள் ஜோஸ் பட்லர், பென் ஸ்டோக்ஸ், ஜோஃப்ரா ஆர்ச்சார் ஆகியோர் தனித்தனி காரணங்களினால, இத்தொடரிலிருந்து விலகியுள்ளனர். 

இதையடுத்து நியூசிலாந்தின் கிளென் பிலீப்ஸ் மற்று வீரராக ஒப்பந்தம் செய்திருந்த ராஜஸ்தான் அணி தற்போது மேலும் இரு வீரர்களையும் தங்கள் அணிக்குள் இழுத்துள்ளது. 

அதன்படி வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி ஆட்டக்காரர் எவின் லூயிஸ், வேகப்பந்து வீச்சாளர் ஒஷேன் தாமஸ் ஆகியோரை ராஜ்ஸ்தான் ராயல்ஸ் அணி ஒப்பந்தம் செய்துள்ளது. 

Also Read: சிட்னி சிக்சர்ஸில் மீண்டும் ஓராண்டு ஒப்பந்தமான பிராத்வைட்!

வெஸ்ட் இண்டீஸ் அணியின் எவின் லூயீஸ் இதுவரை 45 சர்வதேச டி20 போட்டிகளில் 1,318 ரன்களைச் சேர்த்துள்ளார். அவரது ஸ்டிரைக் ரேட் 158 என்பது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை