ஐபிஎல் 2021: டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சு!
ஐபிஎல் தொடரின் இன்றைய லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.
மும்பை வான்கேடே மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் முதலில் பந்துவீசத் தீர்மானித்தார்,
ஏற்கெனவே கடந்த மூன்று போட்டிகளில் இரு அணிகளும் படுதோல்வியைச் சந்தித்துள்ளதால், இன்றைய போட்டியில் யார் வெற்றிபெறுவார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
ஆர்.ஆர்: ஜோஸ் பட்லர், யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன், டேவிட் மில்லர், ரியான் பராக், ராகுல் திவேத்தியா, ஷிவம் தூபே, கிறிஸ் மோரிஸ், முஸ்தபிசுர் ரஹ்மான், ஜெய்தேவ் உனாட்கட், சேட்டன் சக்கரியா.
கேகேஆர்: நிதிஷ் ராணா, சுப்மன் கில், ராகுல் திரிபாதி, ஈயான் மோர்கன், ஆண்ட்ரே ரஸ்ஸல், தினேஷ் கார்த்திக், சுனில் நரைன், பாட் கம்மின்ஸ், பிரஷித் கிருஷ்ணா, வருண் சக்ரவர்த்தி, ஷிவம் மாவி.