ஐபிஎல் 2021: அடுத்தடுத்த அரைசதங்கள்; மும்பை பந்துவீச்சாளர்களை பதம் பார்த்த சிஎஸ்கே!
ஐபிஎல் தொடரின் 27 ஆவது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொண்டது. இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பீல்டிங் செய்ய தேர்வு செய்தது.
இதையடுத்து களமிறங்கிய சென்னை அணிக்கு ருதுராஜ் கெய்க்வாட் 4 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். இதையடுத்து டூ பிளெஸிஸ் - மொயீன் அலி இணை அதிரடியான தொடக்கத்தை கொடுத்தது.
இதில் அதிரடியாக விளையாடிய மொயீன் அலி, பும்ரா, போல்ட், நீஷம் என பாரபட்சம் பாராமல் வெளுத்து வாங்கினார். இதன் மூலம் 31 பந்துகளில் அரைசதம் கடந்தும் அசத்தினார். மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய டூ பிளெஸிஸும் 27 சதம் கடந்து அசத்தியனார்.
பின்னர் பொல்லார்ட் வீசிய பந்துவீச்சில் சுரேஷ் ரெய்னா, டூ பிளெஸிஸ் ஆகியோர் அடுத்தடுத்த பந்துகளில் ஆட்டமிழந்தனர். இதற்கிடையில் மொயீன் அலியும் பும்ரா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
அதன்பின் களமிறங்கிய அம்பத்தி ராயுடு ருத்ர தாண்டவமாடி எதிரணி பந்துவீச்சாளர்களை பதம்பார்த்தார். இதனால் 20 பந்துகளில் அரைசதம் கடந்த ராயுடு, 27 பந்துகளில் 72 ரன்களை சேர்த்தார்.
இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் சிஎஸ்கே அணி 4 விக்கெட் இழப்பிற்கு 218 ரன்களை சேர்த்தது.
மேலும் இது மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிராக சிஎஸ்கே அணி சேர்த்த அதிகபட்ச ரன் கணக்காகவும் பதிவானது. அதேசமயம் இப்போட்டியில் ஜஸ்பிரித் பும்ரா 56 ரன்களை விட்டுக்கொடுத்ததும் இதுவே முதல் முறை என்பதும் குறிப்பிடத்தக்கது.