ஐபிஎல் 2021: பரபரப்பான ஆட்டத்தில் ஆர்சிபியை வீழ்த்தியது ஹைதராபாத்!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற 52ஆவது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 141 ரன்களை மட்டுமே எடுத்தது. இதில் அதிகபட்சமாக ஜேசன் ராய் 44 ரன்களைச் சேர்த்தார். ஆர்சிபி அணி தரப்பில் ஹர்ஷல் படேல் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய ஆர்சிபி அணியின் கேப்டன் விராட் கோலி 5 ரன்னிலும், டேனியல் கிறிஸ்டியன் ஒரு ரன்னிலும், ஸ்ரீகர் பரத் 12 ரன்னிலும் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.
அதன்பின் ஜோடி சேர்ந்த தேவ்தத் படிக்கல் - கிளென் மேக்ஸ்வெல் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். பின் 40 ரன்னில் மேக்ஸ்வெல் ஆட்டமிழக்க, 41 ரன்னில் படிக்கல்லும் விக்கெட்டை இழந்தார்.
இதையடுத்து களமிறங்கிய ஏபிடி வில்லியர்ஸ் - ஷபாஸ் அஹ்மத் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இருப்பினும் கடைசி ஓவரில் ஆர்சிபி வெற்றிக்கு 13 ரன்கள் தேவை என்ற நிலை தேவைப்பட்டது.
Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021
ஆனால் கடைசி ஓவரை வீசிய புவனேஷ்வர் குமார் அந்த ஓவரில் 8 ரன்களை மட்டுமே கொடுத்தார். இதன் மூலம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் ஆர்சிபியை வீழ்த்தி ஆறுதல் வெற்றியைப் பதிவுசெய்தது.