ஐபிஎல் 2021: வருண், சந்தீப் ஆகியோருக்கு கரோனா; போட்டி ஒத்திவைப்பு?

Updated: Mon, May 03 2021 12:30 IST
Image Source: Google

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரும், தமிழ்நாட்டை சேர்ந்தவருமானவர் வருண் சக்கரவர்த்தி. இவருக்கு இன்று மேற்கொள்ளப்பட்ட கரோனா பரிசோதனையில் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.

மேலும் மற்றோரு கேகேஆர் வீரரான சந்தீப் வாரியருக்கும் கரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இதையடுத்து இருவரும் மருத்துவ கண்காணிப்பில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் கேகேஆர் அணி இன்று நடைபெறும் ஐபிஎல் லீக் ஆட்டத்தில் ஆர்சிபி அணியுடன் மோதவுள்ளது. 

ஆனால் தற்போது வீரர்களுக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளதால், நரேந்திர மோடி விளையாட்டரங்கில் நடைபெறவிருந்த போட்டி ஒத்திவைக்கப்படவும் வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை