நடப்பு ஐபிஎல் தொடரின் 50ஆவது லீக் போட்டி நேற்று துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் புள்ளிப் பட்டியலில் முதலிரு இடங்களை பிடித்து இருந்த தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதின. 

Advertisement

இந்த போட்டியில் முதலில் விளையாடிய சென்னை அணியானது துவக்க வீரர்களின் விக்கெட்டை அடுத்தடுத்து இழக்க அதன் பின்னர் வந்த வீரர்கள் அதிரடியாக விளையாட முடியாமல் போனது. இறுதியில் ராயுடு 43 பந்துகளுக்கு 55 ரன்களையும், தோனி 18 ரன்களையும் குவித்தனர். எந்த ஒரு கட்டத்திலும் சென்னை அணியால் அதிரடியாக ஸ்கோர் செய்ய முடியவில்லை. இதனால் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 136 ரன்களை சிஎஸ்கே அணி குவித்தது. 

Advertisement

பின்னர் 137 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய டெல்லி அணியானது துவக்கத்தில் சற்று அதிரடியாக ஆடினாலும் பின்னர் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து சற்று சறுக்கியது. இருப்பினும் இறுதியில் பொறுமையாகவே விளையாடிய டெல்லி அணி ஹெட்மயரின் சிறப்பான ஆட்டம் காரணமாக 19.4 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 139 ரன்களை குவித்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் பெற்ற வெற்றி மூலம் டெல்லி அணி புள்ளி பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறியது.

இந்த போட்டியில் அடைந்த தோல்வி குறித்து சென்னை அணியின் கேப்டன் தோனி கூறுகையில் "நாங்கள் 150 ரன்கள் அருகில் செல்வோம் என்று நினைத்தோம். ஆரம்பத்திலேயே முதலில் சில விக்கெட்டுகளை இழந்ததால் பொறுமையாக விளையாட வேண்டிய அவசியம் ஏற்பட்டது. பின்னர் 15,16 ஓவர்களில் அடித்து ஆட நல்ல அடித்தளம் கிடைத்தது.

இருந்தாலும் அந்த நேரத்தில் நாங்கள் அதிரடியாக ரன்கள் அடிக்க தவறிவிட்டோம். இந்த மைதானம் பேட்டிங் செய்ய சற்று கடினமாகவே இருந்தது. எனவே 150 ரன்கள் வரை குவித்தால் வெற்றிக்கு போதுமானதாக இருக்கும் என்று நினைத்தோம். இந்த மைதானத்தில் நார்மலான கிரிக்கெட்டை விளையாட முடியவில்லை. அந்த அளவிற்கு ஆடுகளம் இரு தன்மை உடையதாக இருந்தது. டெல்லி அணி பேட்ஸ்மேன்களும் கஷ்டப்பட்டனர்.

உயரமான பவுலர்களுக்கு நல்ல மூமென்ட் கிடைத்தது. இருப்பினும் டெல்லி வீரர்கள் சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றுவிட்டார்கள். முதல் 6 ஓவர்களில் ஒரு ஓவர் பெரிய ஓவராக அமைந்துவிட்டது. இருப்பினும் குவாலிட்டியான பேட்ஸ்மேன்கள் இருக்கும்போது இதுபோன்று நடப்பது சகஜம்தான்" என்று தெரிவித்தார்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News