ஐபிஎல் 2021: வார்னர், மனிஷ் அரைசதம்; சிஎஸ்கேவுக்கு 172 ரன்கள் இலக்கு!

Updated: Wed, Apr 28 2021 21:18 IST
Image Source: Google

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற 23ஆவது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடன் மோதியது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்தது. 

இதையடுத்து ஹைதராபாத் அணியின் தொடக்க வீரர்களாக டேவிட் வார்னர், ஜானி பேர்ஸ்டோவ் களமிறங்கினர். அதில் பேர்ஸ்டோவ் 7 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழாந்தார். 

பின்னர் ஜோடி சேர்ந்த வார்னர் - மனீஷ் பாண்டே இணை நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தியது. இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரைசதம் கடந்து அசத்தினர். 

அதன்பின் 57 ரன்கள் எடுத்திருந்த நிலையில் வார்னர், இங்கிடி பந்துவீச்சில் ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து 61 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மனிஷ் பாண்டேவும் அதே ஓவரில் ஆட்டமிழந்தார். 

பின்னர் களமிறங்கிய கேன் வில்லியம்சன் அதிரடியாக விளையாடி அணி ஸ்கோரை உயர்த்தினார். 

இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் ஹைதராபாத் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்களை சேர்த்தது. சிஎஸ்கே அணி தரப்பில் லுங்கி இங்கிடி 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை