டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் மூன்று வேகப்பந்துவீச்சாளர்கள் மட்டுமே தேர்வாகியுள்ளார்கள். ஹார்திக் பாண்டியா நான்கு ஓவர்களையும் வீசுவார் என இதற்கு விளக்கம் அளித்தார் தேர்வுக்குழுத் தலைவர் சேதன் சர்மா. ஆனால், ஐபிஎல் 2021 போட்டியிலேயே பாண்டியா இதுவரை பந்துவீசாததால் டி20 உலகக் கோப்பைப் போட்டியில் அவரால் எப்படிப் பந்துவீச முடியும் என்கிற கேள்வி எழுந்துள்ளது. 

Advertisement

2019 அக்டோபரில் அறுவைச் சிகிச்சை மேற்கொண்ட பாண்டியா, அதன்பிறகு விளையாடிய 41 சர்வதேச ஆட்டங்களில் 46 ஓவர்கள் மட்டுமே வீசியுள்ளார். கடைசியாக ஜூலை 25 அன்று இலங்கைக்கு எதிரான டி20 ஆட்டத்தில் இரு ஓவர்களை வீசினார். 2020 ஐபிஎல் போட்டி முதல் மும்பை அணியில் தொடர்ந்து விளையாடியபோதும் பாண்டியா பந்துவீசவில்லை. 

Advertisement

இந்த வருடம் ஐக்கிய அரபு அமீரகத்தில் மும்பை விளையாடிய நான்கு ஆட்டங்களில் இரண்டில் பாண்டியா பங்கேற்கவில்லை. பிறகு விளையாடிய இரு ஆட்டங்களிலும் ஒரு பேட்டராக அவர் பங்கேற்றார். 

இந்நிலையில் டெல்லிக்கு எதிரான இன்றைய ஆட்டத்துக்கு அளித்த பேட்டியில் பாண்டியா, “ரன்கள் எடுப்பது என்னுடைய தன்னம்பிக்கைக்கு முக்கியப் பங்களிக்கிறது. அணிக்காக ரன்கள் எடுப்பதுதான் முக்கியம். பிளே ஆஃப்புக்குத் தகுதி பெறுவதற்கான தடைகளை ஒவ்வொரு பந்தாகக் கடக்க வேண்டும்.

 மீதமுள்ள எல்லா ஆட்டங்களையும் நாங்கள் வெல்லவேண்டும். வேறுவழியில்லை. ஆனால் இதுபோன்ற நெருக்கடியான சூழல் தான் எங்களுடைய திறமையை முழுவதுமாக வெளிப்படுத்த உதவுகிறது. இது கட்டாயம் வென்றாக வேண்டிய ஆட்டம் என்பதை உணர்ந்துள்ளோம். நான் விரைவில் பந்துவீச ஆரம்பிப்பேன். அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறேன்” என்று தெரிவித்தார். 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News