ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்றுவரும் 30ஆவது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. 

Advertisement

இப்போட்டியில் டாஸ் வென்ற கேகேஆர் அணி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் முதலில் பந்துவீச தீர்மானித்தார். 

Advertisement

அதன்படி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக தேவ்தத் படிக்கல் - ஜோஸ் பட்லர் இணை களமிறங்கியது. இதில் படிக்கல் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த, மறுமுனையிலிருந்த ஜோஸ் பட்லர் வழக்கம் போல் பவுண்டரி, சிக்சர்கள் என எதிரணி பந்துவீச்சை பிரித்துமேய்ந்தார்.

தொடர்ந்து அதிரடியாக விளையாடி வந்த பட்லர் 30 பந்துகளில் அரைசதமும் விளாசினார். அதன்பின் மறுமுனையிலிருந்த தேவ்தத் படிக்கல் 24 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். 

அவரைத் தொடர்ந்து வந்த கேப்டன் சஞ்சு சாம்சன் 19 பந்துகளில் 3 பவுண்டரி, 2 சிக்சர்களை விளாசி 38 ரன்களில் விக்கெட்டை இழந்தார். 

ஆனாலும் தொடர்ந்து அதிரடியாக விளையாடி வந்த ஜோஸ் பட்லர் 59 பந்துகளில் சதம் விளாசி, இந்த சீசனில் தனது இரண்டாவது சதத்தைப் பதிவுசெய்தார். அதன்பின் 103 ரன்கள் எடுத்த நிலையில் ஜோஸ் பட்லர், பாட் கம்மின்ஸின் பந்துவீச்சில் ஆட்டமிழந்து பெவிலியனுக்கு திரும்பினார்.

Advertisement

அதன்பின் களமிறங்கிய வீரர்களால் எதிரணி வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் ஆட்டமிழந்தனர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 217 ரன்களைச் சேர்த்தது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News