ஐபிஎல் 2022: சிஎஸ்கே ரசிகர்களுக்கு நற்செய்தியை வழங்கிய ஃப்ளெமிங்!

Updated: Tue, Apr 26 2022 22:42 IST
IPL 2022: CSK head coach Stephen Fleming expects Moeen Ali to recover in a week (Image Source: Google)

நடப்பு சீசனில் சற்று கம்பேக் கொடுத்திருந்த சென்னை அணிக்கு, மீண்டும் பலத்த அடி விழுந்தது. பஞ்சாப் அணிக்கு எதிரான கடந்த போட்டியில் 11 ரன்கள் வித்தியாசத்தில் மோசமாக தோல்வியடைந்தது.

இந்த போட்டியில் சென்னை அணியின் முன்னணி வீரர் மொயீன் அலி இல்லாததும் முக்கிய காரணம் எனக்கூறலாம். கையில் ஏற்பட்ட பலத்த காயம் காரணமாக அவர் வெளியேற்றப்பட்டார். தொடர்ந்து 2 போட்டிகளாக அவர் பங்குபெறாதது சிஎஸ்கேவின் மிடில் ஆர்டரை பாதித்துள்ளது. இனி வரும் போட்டிகளிலும் அவர் பங்கேற்பாரா என்பது சந்தேகத்துடன் தான் உள்ளது.

இந்நிலையில் பயிற்சியாளர் ஸ்டீஃபன் ஃப்ளெம்மிங் அதுகுறித்து பேசியுள்ளார். அதில், "மொயீன் அலிக்கு பலத்த காயம் என்பது உண்மை தான். எனினும் தற்போது உடல்நிலை தேறியுள்ளது. அடுத்த ஒரு வாரத்திற்கு அவர் அணிக்கு திரும்பிவிடுவார்.

பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் அம்பத்தி ராயுடுவுக்கு கையில் திடீரென காயம் ஏற்பட்டது. எனினும் தற்போது அவருக்கு எந்த பிரச்சினை இல்லையென்றும், சிறிய ஓய்வுக்கு பிறகு அணிக்கு திரும்புவார்" என்றும் தெரிவித்துள்ளார். இது சென்னை அணி ரசிகர்களுக்கு புத்துணர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிஎஸ்கே அணி இதுவரை 8 போட்டிகளில் 2 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் 9ஆவது இடத்தில் உள்ளது. மீதமுள்ள 6 போட்டிகளில் குறைந்தது 5 போட்டிகளில் வெற்றி பெற்றால் தான் ப்ளே ஆஃப் செல்ல முடியும். எனவே சீனியர் வீரர்கள் மீண்டும் தங்களது ஃபார்மை கையில் எடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை