ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்றுவரும் 34ஆவது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்தார்.

Advertisement

அதன்படி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஜோஸ் பட்லர் - தேவ்தத் படிக்கல் இணை களமிறங்கியது. டெல்லி அணி தரப்பில் கலீல் அஹ்மத் முதல் ஓவரை வீசினார். 

Advertisement

தொடக்கத்தில் தடுமாறிய பட்லருக்கு, கடைசி இரண்டு பந்துகளில் அதிர்ஷ்டவசமான பவுண்டரிகளாக அமைந்தது. அதன்பின் பவர்பிளேவின் முதல் ஐந்து ஓவர்கள் வரை இருவரும் பொறுமையான ஆட்டத்தையே வெளிப்படுத்தினர். 

அதன்பின் அதிரடி ஆட்டத்தைக் கையிலெடுத்த பட்லர் 36 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தினார். அவரைத் தொடர்ந்து தேவ்தத் படிக்கல் இந்த சீசனில் தனது முதல் அரைசதத்தைப் பதிவுசெய்தார்.

மறுமுனையில் பவுண்டரிகளால் மைதானத்தைச் சுற்றிக்காண்பித்த ஜோஸ் பட்லர் சதத்தை நெருங்கிக்கொண்டிருக்கையில் இருவரது பார்ட்னர்ஷிப்பும் 150+ ரன்களைக் கடந்தது. 

அதன்பின் 54 ரன்களுடன் தேவ்தத் படிக்கல் ஆட்டமிழக்க, மறுமுனையில் அட்டகாசமாக விளையாடி வந்த ஜோஸ் பட்லர் 57 பந்துகளில் சதத்தைப் பதிவுசெய்தார். மேலும் இந்த சீசனில் ஜோஸ் பட்லர் விளாசும் மூன்றாவது சதம் இதுவாகும். 

Advertisement

அதன்பின் களமிறங்கிய சஞ்சு சாம்சனும் அதிரடியாக விளையாடிய சஞ்சு சாம்சனும் அதிரடியாக விளையாடி அசத்தினார்.

இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 2 விக்கெட் இழப்பிற்கு 222 ரன்களைக் குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஜோஸ் பட்லர் 116 ரன்களைக் குவித்தார்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News