ஐபிஎல் 15ஆவது சீசனின் இன்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸும் கேகேஆரும் ஆடிவருகின்றன. மும்பை டி.ஒய்.பாட்டீல் மைதானத்தில் நடந்துவரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோஹித் சர்மா ஃபீல்டிங்கை தேர்வு செய்தார். 

Advertisement

முதலில் பேட்டிங் ஆடிய கேகேஆர் அணியின் தொடக்க வீரர் ரஹானே நிதானமாக ஆட, வெங்கடேஷ் ஐயர் தொடக்கம் முதலே அடித்து ஆடி ஸ்கோரை வேகமாக உயர்த்தினார். அதிரடியாக ஆடிய வெங்கடேஷ் ஐயர், 24 பந்தில் 43ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். நிதானமாக ஆடிய ரஹானே 25 ரன்னில் ஆட்டமிழந்தார். 

Advertisement

14வது ஓவரின் முதல் பந்தில் ஷ்ரேயாஸ் ஐயரை 6 ரன்னில் முருகன் அஷ்வின் வீழ்த்த, அப்போது கேகேஆர் அணியின் ஸ்கோர் 123 ரன்கள். 15ஆவது ஓவரை வீசிய பும்ரா, அந்த ஓவரில் ஆண்ட்ரே ரசல் (9) மற்றும் நிதிஷ்ராணா(43) ஆகிய இருவரையும் வீழ்த்தினார். அதற்கடுத்து பும்ரா வீசிய 18ஆவது ஓவரில் சுனில் நரைன், பாட் கம்மின்ஸ் மற்றும் ஷெல்டான் ஜாக்சன் ஆகிய மூவரையும் வீழ்த்த, 20 ஓவரில் 165 ரன்களுக்கு கேகேஆரை கட்டுப்படுத்தியது மும்பை அணி. 

அபாரமாக பந்துவீசிய பும்ரா 4 ஓவரில் 10 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டை வீழ்த்தினார். 166 ரன்கள் என்ற சவாலான இலக்கை மும்பை அணி விரட்டியது.

வழக்கம்போல் இப்போட்டியிலும் மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோஹித் சர்மா 2 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அவரைத் தொடர்ந்து வந்த தில்க் வர்மாவும் 6 ரன்களிலும் விக்கெட்டை இழந்தார்.

அவரைத் தொடர்ந்து வந்த ரமந்தீப் சிங், டிம் டேவிட் என சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, மறுமுனையிலிருந்த இஷான் கிஷான் அரைசதம் விளாசி அணிக்கு நம்பிக்கையளித்தார். இதில் 51 ரன்கள் எடுத்திருந்த இஷான் கிஷான், பாட் கம்மின்ஸ் வீசிய 15ஆவது ஓவரில் விக்கெட்டை இழந்தார்.

Advertisement

அவரைத் தொடர்ந்து வந்த டேனியல் சாம்ஸ், முருகன் அஸ்வின் ஆகியோரும் அதே ஓவரில் பாட் கம்மின்ஸிடம் வீழ்ந்தனர். அதன்பின் குமார் கார்திகேயா, அணியின் நம்பிக்கையாக பார்க்கப்பட்ட கீரன் பொல்லார்ட் ஆகியோர் அடுத்தடுத்து ரன் அவுட்டாகி பெவிலியனுக்கு திரும்பினர்.

இதனால் 17.3 ஓவர்களில் மும்பை இந்தியன்ஸ் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 113 ரன்களை மட்டுமே சேர்த்தது. கேகேஆர் தரப்பில் பாட் கம்மின்ஸ் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

இதன்மூலம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 52 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸை வீழ்த்தி அபார வெற்றியைப் பெற்றது. 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News