ஐபிஎல் 2022: ஹர்பஜன் சாதானையை முறியடித்த பும்ரா!

Updated: Sun, May 22 2022 12:13 IST
Image Source: Google

ஐபிஎல் 2022 தொடரின் 69ஆவது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் பும்ரா, முன்னாள் மும்பை வீரர் ஹர்பஜன் சிங் சாதனையை முறியடித்தார். 

நேற்று (மே-21) நடந்த போட்டியில் மும்பை தில்லி அணியை எதிர்கொண்டது. இதில் மும்பை அணியின் நட்சத்திர வீரர் பும்ரா 3 விக்கெட்டுகள் எடுத்தார். மும்பை அணி வெற்றிப் பெற்றது. 

இதுரை, மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அதிக விக்கெட் எடுத்தவர்கள் பட்டியலில் இரண்டாம் இடமிருந்த ஹர்பஜன் சிங்கை பின்னுக்குத் தள்ளி ஜஸ்பிரித் பும்ரா இரண்டாம் இடத்தை கைப்பற்றினார். முதலிடத்தில் மலிங்கா இருக்கிறார்.

மும்பை அணிக்காக அதிக விக்கெட் எடுத்தவர்கள் பட்டியல்: 

  • லசித் மலிங்கா          195
  • ஜாஸ்பிரித் பும்ரா    148
  • ஹர்பஜன் சிங்          147 
  • கைரன் பொலார்ட் 79 
TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை