ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ்  அணிக்கு எதிரான லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முன்னதாக அந்தப் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

Advertisement

அதன்படி முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்களைச் சேர்த்தது. அதைத்தொடர்ந்து இலக்கை விரட்டிய டெல்லி அணி 2 விக்கெட்களை மட்டும் இழந்து 19வது ஓவரில் வெற்றி பெற்றது. .

Advertisement

இந்த நிலையில் நேற்றைய போட்டியில் குறைவான ரன்களைச் சேர்த்ததே எங்கள் தோல்விக்கு காரணம் என ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார்.

தோல்விக்குப் பிறகு பேட்டி அளித்துள்ள ராஜஸ்தான் கேப்டன் சாம்சன், ''நாங்கள் 15 ரன்கள் குறைவாக இருந்தோம். இன்னும் கொஞ்சம் அதிக ரன்களை நாங்கள் எடுத்திருக்க வேண்டும். அதேபோல் மிடில் ஓவர்களில் கொஞ்சம் விக்கெட்களை எடுத்திருக்க வேண்டும். சில கேட்ச்களை தவறவிட்டோம். இது உண்மையில் எங்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. இருப்பினும் நாங்கள் நிச்சயம் வலிமையோடு திரும்பி வருவோம்” எனக் கூறினார்.

ராஜஸ்தான் அணி 14 புள்ளிகளுடன் 3ஆவது இடத்தில் உள்ளது. மீதமுள்ள இரண்டு ஆட்டங்களில் ஒன்றில் வெற்றி பெற்றால்கூட அந்த அணி 16 புள்ளிகளுடன் பிளே-ஆஃப் வாய்ப்பை உறுதி செய்ய அதிக வாய்ப்புள்ளது.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News