ஐபிஎல் 2022: சீட்டுக்கட்டாய் சரிந்த விக்கெட்டுகள்; பரிதாப நிலையில் ஆர்சிபி!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்றுவரும் 36ஆவது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் விளையாடி வருகின்றன.
இப்போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி கேப்டன் கேன் வில்லியம்சன் முதலில் பந்துவீச தீர்மானித்தார்.
அதன்படி களமிறங்கிய ஆர்சிபி அணியின் தொடக்க வீரர்கள் ஃபாஃப் - அனுஜ் ராவத் இணை முதல் ஓவரை தட்டுதடுமாறி கடந்தனர்.
ஆனால் அதன்பின் பந்துவீச வந்த மார்க்கோ ஜான்சன், ஃபஃப் டூ பிளெசிஸ் (5), விராட் கோலி (0), அனுஜ் ராவத் (0) என அடுத்தடுத்து விக்கெட்டுகளை வீழ்த்தி ஆர்சிபி ரசிகர்கள் பெரும் சோகத்தில் ஆழ்த்தினார்.
அதனைத் தொடர்ந்து வந்த கிளென் மேக்ஸ்வெல், தினேஷ் கார்த்திக் என நட்சத்திர வீரர்களும் சொற்ப ரன்களில் விக்கெட்டுகளை இழக்க, அடுத்து களமிறங்கிய வீரர்களும் வந்த வேகத்திலேயே பெவிலியனுக்கு திரும்பினர்.
இதனால் 16.1 ஓவர்களிலேயே ஆர்சிபி அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 68 ரன்களை மட்டுமே சேர்த்தது. ஹைதராபாத் அணி தரப்பில் மார்கோ ஜான்சன், நடராஜன் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.