ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசன் தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இதில் குஜராத் டைட்டன்ஸ் அணி நடப்பாண்டு பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளது. அதேசமயம் மீதமுள்ள மூன்று இடங்களைப் பிடிக்க மற்ற அணிகள் தீவிரமாக மல்லுக்கட்டி வருகிறது. 

Advertisement

அதன் ஒரு பகுதியாக இன்று நடைபெறும் 64ஆவது லீக் ஆட்டத்தில் ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், டேவிட் வார்னர் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. 

Advertisement

போட்டி தகவல்கள்

  • மோதும் அணி - பஞ்சாப் கிங்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ்
  • இடம் - ஹி.பி. கிரிக்கெட் மைதானம், தர்மசாலா
  • நேரம் - இரவு 7.30 மணி

போட்டி முன்னோட்டம் 

பஞ்சாப் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற இன்னும் வாய்ப்புள்ளது. இன்று நடைபெறும் ஆட்டத்திலும், அடுத்து வரும் ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியிலும் கட்டாயம் வெற்றி பெற வேண்டும். ஆனால் அதுமட்டும் போதாது. பிற அணிகளின் முடிவுக்காகவும் காத்திருக்க வேண்டும். மேலும் பஞ்சாப் அணியின் ரன் ரேட் மைனஸில் உள்ளதால், இனி வரும் போட்டிகளில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவது அவசியம்.

கடைசியாக கடந்த 13ஆம் தேதி டெல்லியுடன் மோதிய பஞ்சாப் அணி, 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடக்க ஆட்டக்காரர் பிரப்சிம்ரன் சிங் கடந்த போட்டியில் அபாரமாக விளையாடி சதம் விளாசினார். எனினும் அவரை தவிர பிற வீரர்கள் நிலைத்து நின்று விளையாடவில்லை. கேப்டன் தவான், லிவிங்ஸ்டோன், சாம் கரன், ஜிதேஷ் சர்மா ரன் குவிப்பது அவசியம். பந்துவீச்சில் ஹர்ப்ரீத் பிரார், நேதன் எல்லீஸ், ராகுல் சாஹர், அர்ஷ்தீப் சிங் ஃபார்மில் உள்ளனர். 12 போட்டிகளில் விளையாடியுள்ள அர்ஷ்தீப், 16 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.

Advertisement

அதேசமயம், புள்ளிப்பட்டியலில் 10 இடத்தில் உள்ள டெல்லி அணி இதுவரை 12 போட்டிகளில் விளையாடி 4 வெற்றி, 8 தோல்வியைச் சந்தித்துள்ளது. கேப்டன் டேவிட் வார்னர் 12 ஆட்டங்களில் 384 ரன்களை குவித்துள்ளார். பில் சால்ட் ஓரளவுக்கு நம்பிக்கை தருகிறார். பிற வீரர்கள் நிலைத்து நின்று விளையாடத் தவறுகின்றனர். பவுலிங்கில் அனுபவ வீரர் இஷாந்த் சர்மா, அக்சர் படேல், குல்தீப் யாதவ் வலுசேர்க்கின்றனர். டெல்லி அணி ஏற்கனவே பிளே ஆஃப் வாய்ப்பை இழந்துவிட்டது. எனினும் இனி வரும் ஆட்டங்களில் ஆறுதல் வெற்றி பெற அந்த அணி போராடும் என எதிர்பார்க்கலாம். 

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 31
  • பஞ்சாப் கிங்ஸ் - 16
  • டெல்லி கேப்பிட்டல்ஸ் - 15

உத்தேச லெவன்

Advertisement

பஞ்சாப் அணி: பிரப்சிம்ரன் சிங், தவான் (கேப்டன்), லிவிங்ஸ்டோன், ஜிதேஷ் ஷர்மா, சாம் கரன், ஹர்ப்ரீத் பிரார், ஷாருக்கான், சிக்கந்தர் ராசா, ரிஷி தவான், ராகுல் சாஹர், அர்ஷ்தீப் சிங், நாதன் எல்லீஸ்.

டெல்லி அணி: வார்னர் (கேப்டன்), பில் சால்ட், மார்ஷ், ரோசோவ், அக்சர் படேல், மணீஷ் பாண்டே, அமன் ஹகீம் கான், பிரவீன் டூபே, குல்தீப் யாதவ், முகேஷ் குமார், இஷாந்த் சர்மா, கலீல் அகமது. 

ஃபேன்டஸி லெவன் டிப்ஸ்

  • விக்கெட் கீப்பர்கள் - பில் சால்ட், பிரப்சிம்ரன் சிங்
  • பேட்ஸ்மேன்கள் - டேவிட் வார்னர் (கேப்டன்), ஷிகர் தவான்
  • ஆல்-ரவுண்டர்கள் - மிட்செல் மார்ஷ், அக்சர் படேல் (துணை கேப்டன்), லியாம் லிவிங்ஸ்டோன், சாம் கரன்
  • பந்துவீச்சாளர்கள் - இஷாந்த் சர்மா, நாதன் எல்லிஸ், ஹர்பிரீத் ப்ரார்
Advertisement

*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News