ஐபிஎல் 2023: சிஎஸ்கேவுக்காக 200ஆவது போட்டியை வழிநடத்தும் தோனி!

Updated: Wed, Apr 12 2023 13:43 IST
Image Source: Google

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் விளையாட உள்ளது. இது 200ஆவது போட்டியில் சிஎஸ்கே-வை கேப்டனாக தோனி வழிநடத்தும் போட்டியாகவும் அமைந்துள்ளது. 

கடந்த 2008 முதல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழிநடத்தி வருகிறார் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி. 2010, 2011, 2018 மற்றும் 2021 என நான்கு முறை ஐபிஎல் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது சிஎஸ்கே. 2010 மற்றும் 2014-ல் சாம்பியன்ஸ் லீக் பட்டத்தையும் வென்றுள்ளது. 

மேலும், 5 முறை இறுதிப் போட்டியில் விளையாடி உள்ளது. 2 முறை நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறியுள்ளது சென்னை அணி. இந்த தருணங்கள் அனைத்திலும் சென்னை அணியை வழிநடத்தியது தோனி தான். 2016 மற்றும் 2017 சீசன்களில் சென்னை அணி விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தோனி இதுவரையில் சென்னை அணியை 199 போட்டிகளில் கேப்டனாக வழிநடத்தி உள்ளார். அதில் 120 வெற்றிகளை சென்னை அணி பெற்றுள்ளது. 78 போட்டிகளில் தோல்வி மற்றும் 1 போட்டியில் முடிவு எட்டப்படவில்லை. அவர் வழிநடத்தும் 200ஆவது போட்டியில் வெற்றி பெற்று, அதை அவருக்கு அன்பு பரிசாக வழங்குவோம் என சிஎஸ்கே ஆல்-ரவுண்டர் ஜடேஜா தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை