ஐபிஎல் 2023: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!

Updated: Sat, Apr 29 2023 11:59 IST
IPL 2023, KKR vs GT Dream11 Team: Jason Roy vs Shubman Gill; Check Fantasy XI! (Image Source: CricketNmore)

ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசனின் கடந்த மார்ச் மாதம் 31ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த சீசனில் களமிறங்கியுள்ள 10 அணிகள் அனைத்தும் புள்ளிப் பட்டியலில்  முதல் நான்கு இடங்களுக்குள் இடம் பெற மும்மரமாக விளையாடி வருகின்றன. இதில் ஏற்கனவே டெல்லி மற்றும் ஹைதராபாத் அணிகள் தொடர் தோல்வியால் தொடரில் இருந்து வெளியேறும் நிலையில் உள்ளது.

மற்ற 8 அணிகளில் 4 அணிகள் ப்ளேஆஃப் சுற்றுக்கு முன்னேற வாய்ப்புகள் உள்ளன. அவற்றில் பந்து வீச்சு மற்றும் பேட்டிங் என அனைத்திலும் சிறந்து விளங்கும் அணிகளாக இருக்கும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் நடப்புச் சாம்பியனும் பலமான அணியுமான குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதவுள்ளன. இந்த போட்டி இன்று அதாவது ஏப்ரல் 29ஆம் தேதி மதியம் 3.30 மணிக்கு கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறவுள்ளது. 

போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ்
  • இடம் - ஈடன் கார்டன், கொல்கத்தா
  • நேரம் - இரவு 7.30 மணி

போட்டி முன்னோட்டம்

இந்த தொடரில் இதுவரை 8 போட்டிகளில் விளையாடியுள்ள கொல்கத்தா அணி அதில் மூன்றி மட்டுமே வெற்றி பெற்று ஆறு புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 7வது இடத்தில் உள்ளது. இந்த சீசன் கொல்கத்தா அணிக்கு ஏமாற்றத்துடன் தொடங்கியது எனலாம். பஞ்சாப் அணியுடனான மோதலில் மழை காரணமாக டக்வெர்த் - லீவிஸ் -ஸ்டெரின் முறைப்படி 7 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை ஏற்கவேண்டிய நிலைக்கு ஆளானது. இந்த தொடரில் கொல்கத்தா பெற்ற வெற்றி என்றால் அது பெங்களூரு அணிக்கு எதிரான 2 போட்டிகளும், குஜராத் அணிக்கு எதிரான ஒரு போட்டியும் தான்.

குஜராத் அணியை அதன் சொந்த மைதானத்தில் வீழ்த்தியது கொல்கத்தா அணிக்கு பலமான விசயமாக உள்ளது. இன்று நடைபெறும் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறுவதால் கொல்கத்தா அணி வெற்றிக்கு தங்களை தயார் படுத்தும் பணிகளில் மும்மரமாக இருக்கிறது. பெங்களூரு அணிக்கு எதிரான வெற்றிக்குப் பின்னர் கொல்கத்தா அணி இன்று களமிறங்குவதால் அணியில் நம்பிக்கை சற்று அதிகமாகவே இருக்கும் எனலாம் 

கடந்த ஆண்டு களமிறங்கி கோப்பையை தன்வசமாக்கிய குஜராத் அணி இந்த ஆண்டும் வீறுநடைபோட்டு புள்ளிப்பட்டியலில் ஏற்றத்துடன் இருக்க முனைப்பு காட்டும். இதுவரை 7 போட்டிகளில் விளையாடியுள்ள குஜராத் அணி இரண்டு போட்டிகளில் மட்டும் தோல்வியைச் சந்தித்துள்ளது. ஐந்து போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ள குஜராத் அணி இந்த போட்டியில் வெற்றி பெற்றால் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்துக்குச் செல்லும். மேலும் தனது சொந்த மைதானத்தில் கொல்கத்தாவிடம் தோல்வியைச் சந்தித்த குஜராத் அணி அதற்கு பதிலடி வழங்கிம் நோக்கில் சிறப்பாக செயல்படும் எனலாம்.  

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 02
  • கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - 01
  • குஜராத் டைட்டன்ஸ் - 01

உத்தேச லெவன்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் : ஜேசன் ராய், நாராயண் ஜெகதீசன், வெங்கடேஷ் ஐயர், நிதிஷ் ராணா(கே), ஆண்ட்ரே ரஸ்ஸல், ரிங்கு சிங், டேவிட் வைஸ், சுனில் நரைன், உமேஷ் யாதவ், வருண் சக்ரவர்த்தி, சுயாஷ் சர்மா.

குஜராத் டைட்டன்ஸ்: விருத்திமான் சஹா, ஷுப்மான் கில், ஹர்திக் பாண்டியா (கே), அபினவ் மனோகர், விஜய் சங்கர், டேவிட் மில்லர், ராகுல் திவேத்தியா, ரஷித் கான், முகமது ஷமி, நூர் அகமது, மோகித் சர்மா.

ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்

  • விக்கெட் கீப்பர் - விருத்திமான் சாஹா
  • பேட்ஸ்மேன்கள் - டேவிட் மில்லர், ஜேசன் ராய், நிதிஷ் ராணா, வெங்கடேஷ் ஐயர், ரிங்கு சிங், சுப்மான் கில்
  • ஆல்-ரவுண்டர்கள் - ஆண்ட்ரே ரசல், ஹர்திக் பாண்டியா
  • பந்துவீச்சாளர்கள் - ரஷித் கான், வருண் சக்ரவர்த்தி

கேப்டன்/துணைக்கேப்டன் - ஜேசன் ராய், வெங்கடேஷ் ஐயர், ஷுப்மன் கில், ஹர்திக் பாண்டியா

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை