ஐபிஎல் 2023: குஜராத் பந்துவீச்சாளர்களை துவம்சம் செய்த குர்பாஸ்! கடின இலக்கை நிர்ணயித்தது கேகேஆர்!

Updated: Sat, Apr 29 2023 18:04 IST
Image Source: Google

16ஆவது சீசன் ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதில் இன்று நடைபெற்று வரும் 39ஆவது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. 

அதன்படி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக ரஹ்மனுல்லா குர்பாஸ் - ஜெகதீசன் இணை களமிறங்கினர். இதில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த நாராயன் ஜெகதீசன் 19 ரன்களைச் சேர்த்திருந்த நிலையில் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய ஷர்தூல் தாக்கூர் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார்.

ஒருபக்கம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும், மறுமுனையில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ரஹ்மனுல்லா குர்பாஸ் 26 பந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அதேசமயம் மறுமுனையில் வெங்கடேஷ் ஐயர் 11 ரன்களிலும், கேப்டன் நிதீஷ் ராணா 4 ரன்களிலும் என அடுத்தடுத்து ஜூசுவ லிட்டில் பந்துவீச்சில் விக்கெட்டை இழக்க, 39 பந்துகளில் 5 பவுண்டரி, 7 சிக்சர்களை விளாசிய ரஹ்மனுல்லா குர்பாஸ் 81 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 

அவரைத் தொடர்ந்து அதிரடியாக விளையாட முயற்சித்த ரிங்கு சிங் 19 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். இதனையடுத்து ஜோடி சேர்ந்த ஆண்ட்ரே ரஸல் - டேவிட் வைஸ் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.  இதில் ஆண்ட்ரே ரஸல் 34 ரன்களை விளாசினார். 

இதன்மூலம் நிர்னயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் கேகேஆர் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்களைச் சேர்த்தது. ஆஃப்கானிஸ்தான் அணி தரப்பில் நூர் அஹ்மத், ஜோஷுவா லிட்டில், முகமது ஷமி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை