ஐபிஎல் 2023: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!

Updated: Mon, May 08 2023 12:24 IST
IPL 2023 - Kolkata Knight Riders vs Punjab Kings, Preview, Expected XI & Fantasy XI Tips! (Image Source: CricketNmore)

இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் 16ஆவது சீசன் கிரிக்கெட் தொடரின் லீக் போட்டிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெறும் 53ஆவது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதுகின்றன. 

போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ்
  • இடம் - ஈடன் கார்டன்ஸ், கொல்கத்தா
  • நேரம் - இரவு 7.30 மணி

போட்டி முன்னோட்டம்

இந்த சீசனில் முதலிரண்டு போட்டிகளிலும் வெற்றியுடன் தொடங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணி, ஹைதராபாத், குஜராத், பெங்களூர், லக்னோ, மும்பை ஆகிய அணிகளுடன் தோல்வியைச் சந்தித்துள்ளது. பஞ்சாப் அணியைப் பொறுத்தவரை ஷிகர் தவன், பிரப்சிம்ரன் சிங், மாத்யூ ஷார்ட், லியாம் லிவிங்ஸ்டோன், சாம் கர்ரன் ஆகியோர் நட்சத்திர வீரர்கள் ஆவர்.

அதிலும் குறிப்பாக லியாம் லிவிங்ஸ்டோன் 163.54 ஸ்ட்ரைக் ரேட்டுடன் ஐந்து இன்னிங்ஸ்களில் 157 ரன்கள் எடுத்துள்ளார். இவர் மும்பை அணிக்கு எதிரான முந்தைய போட்டியில் 42 பந்துகளில் 82 ரன்கள் குவித்தார். அதேபோல், சிஎஸ்கே அணிக்கு எதிராகவும் 24 பந்துகளில் 40 ரன்கள் விளாசினார். இதையடுத்து, இன்றைய கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியிலும் சிறப்பாக செயல்படுவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. 

கொல்கத்தாவைப் பொறுத்தவரை ரஹ்மனுல்லா குர்பாஸ், ஜேசன் ராய், வெங்கடேஷ் ஐயர், ஆன்ட்ரே ரசல், சுனில் நரேன், ஷர்துல் தாக்குர், நிதிஷ் ராணா ஆகிய நட்சத்திர வீரர்கள் இருப்பது அணியின் பலமாக பார்க்கப்படுகிறது.  நடப்பு சீசனில் கொல்கத்தா அணிக்காக விளையாடி வரும் வருண் சக்ரவர்த்தி 10 ஆட்டங்களில் 14 விக்கெட்டுகள் எடுத்து முன்னணியில் உள்ளார். 

அவரைத் தாண்டி, சுனில் நரைன், உமேஷ் யாதவ், ஹர்ஷித் ராணா, ஷர்துல் தாக்கூர் ஆகியோரும் சிறப்பாக செயல்படும் பட்சத்தில் அந்த அண் நிச்சயம் வெற்றியை தங்கள் வசப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 31
  • கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - 20
  • பஞ்சாப் கிங்ஸ் - 11

உத்தேச லெவன்

கேகேஆர்: ஜேசன் ராய், ரஹ்மானுல்லா குர்பாஸ், வெங்கடேஷ் ஐயர், நிதிஷ் ராணா (கே), ரிங்கு சிங், ஆண்ட்ரே ரஸ்ஸல், சுனில் நரைன், ஷர்துல் தாக்கூர், ஹர்ஷித் ராணா, வைபவ் அரோரா, வருண் சக்ரவர்த்தி

பஞ்சாப் கிங்ஸ்: பிரப்சிம்ரன் சிங், ஷிகர் தவான் (கே), மேட் ஷார்ட், லியாம் லிவிங்ஸ்டோன், ஜிதேஷ் ஷர்மா, சாம் கரன், ஷாருக்கான், ஹர்பிரீத் பிரார், ரிஷி தவான், ராகுல் சாஹர், அர்ஷ்தீப் சிங்

ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்

  • விக்கெட் கீப்பர் - ஜிதேஷ் சர்மா
  • பேட்ஸ்மேன்கள் - ஷிகர் தவான் (துணை கேப்டன்), ஜேசன் ராய், நிதிஷ் ராணா, ரிங்கு சிங்
  • ஆல்-ரவுண்டர்கள் - ஆண்ட்ரே ரஸ்ஸல், மாட் ஷார்ட், லியாம் லிவிங்ஸ்டோன் (கேட்ச்), சாம் கர்ரன்
  • பந்துவீச்சாளர்கள் - வருண் சக்ரவர்த்தி, அர்ஷ்தீப் சிங்
TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை