ஐபிஎல் 2023: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!

Updated: Tue, May 16 2023 12:10 IST
Image Source: CricketNmore

ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசன் தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இதில் குஜராத் டைட்டன்ஸ் அணி நடப்பாண்டு பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளது. அதேசமயம் மீதமுள்ள மூன்று இடங்களைப் பிடிக்க மற்ற அணிகள் தீவிரமாக மல்லுக்கட்டி வருகிறது. 

அதன் ஒரு பகுதியாக இன்று நடைபெறும் 63ஆவது லீக் ஆட்டத்தில் குர்னால் பாண்டியா தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும், ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. 

போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs மும்பை இந்தியன்ஸ்
  • இடம் - ஏக்னா கிரிக்கெட் மைதானம், லக்னோ
  • நேரம் - இரவு 7.30 மணி

போட்டி முன்னோட்டம்

குர்னால் பாண்டியா தலைமையிலான லக்னோ அணி 12 ஆட்டங்களில் விளையாடி 6 வெற்றி, 5 தோல்வி, ஒரு முடிவில்லை என 13 புள்ளிகளுடன் உள்ளது. அந்த அணி இனி வரும் தனது 2 லீக் ஆட்டங்களிலும் வெற்றி கண்டால் அடுத்த சுற்றுக்கு (பிளே-ஆஃப்) தகுதி பெற முடியும். மாறாக ஒரு ஆட்டத்தில் வெற்றியும், மற்றொன்றில் தோல்வியும் காணும் பட்சத்தில் மற்ற அணிகளின் முடிவு சாதகமாக அமைந்தால் நிகர 'ரன்-ரேட்' பிரச்சினையின்றி அடுத்த சுற்றுக்குள் கால்பதிக்க வாய்ப்புள்ளது.

வெற்றி, தோல்வியை மாறி, மாறி சந்தித்து வரும் லக்னோ அணியின் கேப்டன் கேஎல் ராகுல் காயம் காரணமாக போட்டி தொடரில் இருந்து விலகியதால் அந்த அணியை ஆல்-ரவுண்டர் குர்ணல் பாண்டியா வழிநடத்தி வருகிறார். முந்தைய ஆட்டத்தில் அந்த அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் ஹைதராபாத்தை வீழ்த்திய உற்சாகத்துடன் இந்த போட்டியை சந்திக்கிறது. லக்னோ அணியில் பேட்டிங்கில் கைல் மேயர்ஸ், நிகோலஸ் பூரன், ஆயுஷ் பதோனி, குயின்டான் டி காக்கும், பந்து வீச்சில் ரவி பிஷ்னோய், அவேஷ் கான், நவீன் உல்-ஹக், அமித் மிஸ்ரா, யாஷ் தாக்குரும், ஆல்-ரவுண்டராக கேப்டன் குருணல் பாண்டியா, மார்கஸ் ஸ்டோனிசும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள்.

மறுமுனையில், 5 முறை சாம்பியனான மும்பை அணி 12 போட்டிகளில் விளையாடி 7 வெற்றி, 5 தோல்வியுடன் 14 புள்ளிகள் பெற்றுள்ளது. அந்த அணி தனது எஞ்சிய 2 ஆட்டங்களில் வெற்றி பெற்றால் அடுத்த சுற்றை உறுதி செய்வதுடன் 'டாப்-2' இடங்களுக்குள் முன்னேற முடியும். இதில் ஒன்றில் மட்டும் வெற்றி பெற்றால் அடுத்த சுற்றுக்குள் நுழைய மற்ற அணிகளின் முடிவை சார்ந்து இருக்க வேண்டியது வரும்.

முதலில் சற்று தடுமாறிய மும்பை அணி தற்போது நல்ல ஃபார்மை எட்டியிருக்கிறது. கடைசி 5 ஆட்டங்களில் 4-ல் வெற்றி கண்டு இருக்கும் அந்த அணி முந்தைய 2 லீக் ஆட்டங்களில் பெங்களூரு, குஜராத் அணிகளை அடுத்தடுத்து துவம்சம் செய்த உத்வேகத்துடன் உள்ளது. பேட்டிங்கில் சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், கேமரூன் கிரீன், கேப்டன் ரோஹித் சர்மா, நேஹல் வதேராவும், பந்து வீச்சில் பியுஷ் சாவ்லா, பெரன்டோர்ப், ஆகாஷ் மாத்வாலும் நல்ல நிலையில் உள்ளனர். 

இந்த ஆட்டம் இரு அணிகளுக்கும் மிகவும் முக்கியமானதாகும். அடுத்த சுற்று வாய்ப்பை பிரகாசப்படுத்த இரு அணிகளும் வரிந்து கட்டும் என்பதால் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது. லக்னோ ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு அனுகூலமானதாகும். சுழற்பந்து வீச்சை சிறப்பாக எதிர்கொள்வதை பொறுத்தே அணியின் வெற்றி அமையும் எனலாம்.

நேருக்கு நேர்

  • மோதும் அணிகள் - 02
  • லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - 02
  • மும்பை இந்தியன்ஸ் - 00

உத்தேச லெவன்

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்: கைல் மேயர்ஸ், குயின்டன் டி காக், பிரேராக் மன்கட், மார்கஸ் ஸ்டோய்னிஸ், நிக்கோலஸ் பூரன், குர்னால் பாண்டியா, ஆயுஷ் படோனி, ரவி பிஷ்னோய், யுத்வீர் சிங், அவேஷ் கான், அமித் மிஸ்ரா.

மும்பை இந்தியன்ஸ்: இஷான் கிஷன், ரோஹித் சர்மா (கே), சூர்யகுமார் யாதவ், நேஹால் வதேரா, டிம் டேவிட், கேமரூன் கிரீன், கிறிஸ் ஜோர்டான், பியூஷ் சாவ்லா, ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப், குமார் கார்த்திகேயா, ஆகாஷ் மத்வால்

ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்

  • விக்கெட் கீப்பர்கள் - குயின்டன் டி காக், இஷான் கிஷன்
  • பேட்ஸ்மேன்கள் - சூர்யகுமார் யாதவ் (துணை கேப்டன்), ஆயுஷ் படோனி
  • ஆல்-ரவுண்டர்கள் - மார்கஸ் ஸ்டோனிஸ், க்ருனால் பாண்டியா, பிரேராக் மன்கட், கேமரூன் கிரீன்
  • பந்துவீச்சாளர்கள் - பியூஷ் சாவ்லா (கேப்டன்), ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப், ரவி பிஷ்னோய்

*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை