ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசன் தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இதில் குஜராத் டைட்டன்ஸ் அணி நடப்பாண்டு பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளது. அதேசமயம் மீதமுள்ள மூன்று இடங்களைப் பிடிக்க மற்ற அணிகள் தீவிரமாக மல்லுக்கட்டி வருகிறது. அதன் ஒரு பகுதியாக இன்று நடைபெற்று வரும் 63ஆவது லீக் ஆட்டத்தில் குர்னால் பாண்டியா தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும், ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. 

Advertisement

இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. அதன்படி லக்னோ அணியின் தொடக்க வீரர்களாக குயின்டன் டி காக் - தீபக் ஹூடா இணை களமிறங்கினர். இதில் தீபக் ஹூடா 5 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்த பந்திலேயே இளம் வீரர் மான்கட்டும் ஆட்டமிழந்தார். அதன்பின் பியூஷ் சாவ்லா வீசிய முதல் பந்திலேயே குயின்டன் டி காக் ஆட்டமிழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். 

Advertisement

இதையடுத்து ஜோடி சேர்ந்த கேப்டன் குர்னால் பாண்டியா - மார்கஸ் ஸ்டொய்னிஸ் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தியதுடன், மேற்கொண்டு விக்கெட்டுகள் ஏதும் இழக்காமல் பார்த்துக்கொண்டனர். இந்த இணையை பிரிக்க முடியாமல் மும்பை அணி வீரர்கள் என்ன செய்வதென தெரியாமல் தடுமாறினர். 

அதன்பின் ஆட்டத்தின் 16 ஓவர்கள் முடிந்த நிலையில்  குர்னால் பாண்டியா 49 ரன்களை எடுத்த நிலையில் ரிட்டையர்ட் ஹர்ட் முறையில் பெவிலியனுக்கு திரும்பி அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார், அதேசமயம் மறுமுனையில் அதிரடியாக விளையாடிய ஸ்டோய்னிஸ் அரைசதத்தைப் பதிவுசெய்ததுடன், கிறிஸ் ஜோர்டன் வீசிய 17ஆவது ஓவரில் அடுத்தடுத்து 2 சிக்சர், 3 பவுண்டரிகளை விளாசி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினார். 

இதன்மூலம் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்களைச் சேர்த்தது. இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த மார்கஸ் ஸ்டொய்னிஸ் 4 பவுண்டரி, 8 சிக்சர்களை விளாசி 89 ரன்களைச் சேர்த்தார். இதையடுத்து 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி விளையாடவுள்ளது. 

 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News