ஐபிஎல் 2023: மும்பை இந்தியன்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!

Updated: Sun, Apr 30 2023 15:37 IST
IPL 2023, MI vs RR Dream11 Team: Sanju Samson or Rohit Sharma? Check Fantasy XI (Image Source: CricketNmore)

ஐபிஎல் 16ஆவது சீசனின் 42 வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இன்று இரவு 7 மணிக்கு மோத இருக்கின்றன. இத போட்டியானது மும்பை அணியின் சொந்த மைதானமான வான்கடே மைதானத்தில் நடைபெற இருக்கிறது. 

போட்டி தகவல்கள்

  •     மோதும் அணிகள் – மும்பை இந்தியன்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ்
  •     நேரம் - இரவு 7:30 மணி
  •     இடம் - வான்கடே மைதானம், மும்பை

போட்டி முன்னோட்டம் 

இரண்டு தோல்விகளுடன் ஐபிஎல் தொடரை தொடங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி, தொடர்ச்சியாக மூன்று போட்டிகளில் வெற்றி பெற்றது. மீண்டும் தற்போது இரண்டு தோல்விகளுடன் தடுமாறி வருகிறது. கடந்த போட்டியில் தற்போதைய சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக 55 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது.

மும்பை இந்தியன்ஸ் அணி வலுவான பேட்டிங் ஆர்டரை கொண்டு இருந்தாலும், கடந்த போட்டியில் யாரும் சிறப்பாக செயல்படவில்லை. நேஹால் வதேரா மற்றும் கடந்த போட்டியில் 21 பந்துகளில் 40 ரன்கள் எடுத்தார். பந்து வீச்சை பொறுத்தவரை பியூஸ் சாவ்லா அதிகபட்சமாக 2 விக்கெட்களை வீழ்த்தினார். மும்பை அணியின் பேட்ஸ்மேன்கள் தங்களது கடப்பாரை பேட்டிங் வியூகத்தை கையில் எடுத்தால், நிச்சயம் வெற்றிபெறும். 

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான கடைசி போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தொடர் இரண்டு தோல்விகளுக்கு பிறகு வெற்றிபெற்றது. முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் 202 ரன்கள் குவித்தது. யஷஸ்வி ஜெய்ஷ்வால் வெறும் 43 பந்துகளில் 77 ரன்கள் எடுத்து அணிக்கு வெற்றியை பரிசளித்தார். பந்து வீச்சாளர்கள் ரவிச்சந்திரன் அஷ்வின் மற்றும் ஆடம் ஜம்பா சிறப்பாக ஆடி வருகின்றனர். 

ராஜஸ்தான் அணி இன்றைய போட்டியில் வெற்றிபெற்றால் மீண்டும் ஐபிஎல் அட்டவணையில் முதலிடத்திற்கு முன்னேறும். அதே நேரத்தில் மும்பை இந்தியன்ஸ் கட்டாய வெற்றிக்காக போராடும். 

நேருக்கு நேர் 

  • மோதிய போட்டிகள் - 27
  • மும்பை இந்தியன்ஸ் - 14
  • ராஜஸ்தான் ராயல்ஸ் - 12
  • டிரா - 01

உத்தேச லெவன்

மும்பை இந்தியன்ஸ்: ரோஹித் சர்மா, இஷான் கிஷான், கேமரூன் கிரீன், திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ், டிம் டேவிட், நேஹால் வதேரா, அர்ஜுன் டெண்டுல்கர், ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப், ரிலே மெரிடித், பியூஷ் சாவ்லா.

ராஜஸ்தான் ராயல்ஸ் - யஷஸ்வி ஜெய்ஷ்வால், ஜோஸ் பட்லர், சஞ்சு சாம்சன் (கே), துருவ் ஜூரல், தேவ்தத் படிக்கல், ரவிச்சந்திரன் அஷ்வின், ஜேசன் ஹோல்டர், ஆடம் ஸாம்பா, சந்தீப் சர்மா, யுஸ்வேந்திர சாஹல்.

ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்

  • விக்கெட் கீப்பர்கள் - ஜோஸ் பட்லர், இஷான் கிஷன்
  • பேட்ஸ்மேன்கள் - சூர்யகுமார் யாதவ், தேவ்தத் படிக்கல், யஷஸ்வி ஜெய்ஸ்வால், திலக் வர்மா
  • ஆல்ரவுண்டர்கள் - ரவிச்சந்திரன் அஷ்வின், ஜேசன் ஹோல்டர், கேமரூன் கிரீன்
  • பந்துவீச்சாளர்கள் - பியூஷ் சாவ்லா, ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப்.

கேப்டன்/துணைக்கேப்டன் - ஜோஸ் பட்லர், யஷஸ்வி ஜெய்ஷ்வால், திலக் வர்மா, இஷான் கிஷன் 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை