ஐபிஎல் 2023: 405 வீரர்களுடன் தொடங்கவுள்ள மினி ஏலாம்!

Updated: Tue, Dec 13 2022 19:15 IST
Image Source: Google

அடுத்தாண்டுக்கான ஐபிஎல் தொடரின் மினி ஏலம் வரும் டிசம்பர் 23ஆம் தேதி நடைபெறவுள்ளது. கேரள மாநிலம் கொச்சியில் இந்த ஏலம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக அனைத்து அணிகளும் தாங்கள் தக்கவைக்கப்போகும் வீரர்களின் பட்டியலையும், விடுவிக்கும் வீரர்களின் பட்டியலும் வெளியிடப்பட்டன.

அதன்படி 10 அணிகளுக்கும் சேர்த்து மொத்தமாக 87 வீரர்கள் இந்த மினி ஏலத்தில் வாங்கப்படவுள்ளனர். இதில் அதிகபட்சமாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு 13 வீரர்களும், குறைந்தபட்சமாக டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு 5 வீரர்களும் தேவைப்படுகின்றனர். இதற்காக உலகம் முழுவதும் இருந்து மொத்தமாக 991 வீரர்கள் தங்களது பெயர்களை பதிவு செய்திருந்தனர்.

இந்நிலையில் அந்த 991 வீரர்களில் இருந்து 405 வீரர்களை மினி ஏலத்திற்காக தேர்வு செய்துள்ளது பிசிசிஐ. வீரர்களின் பட்டியலை ஐபிஎல் அணிகளுக்கு கொடுக்கப்படும். அதில் ஒவ்வொரு அணியும் கேட்கும் வீரர்களை தவிர மற்ற வீரர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். 

அதன்படி 369 வீரர்களை பிசிசிஐ தேர்வு செய்தது. இதுமட்டுமல்லாமல் அணிகளின் கோரிக்கையை ஏற்று கூடுதலாக 36 வீரர்களும் இதில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

அடிப்படை தொகை மற்றும் வீரர்களின் விவரம்

  • அடிப்படை தொகை ரூ. 2 கோடி - 19 வீரர்கள்
  • அடிப்படை தொகை ரூ. 1.5 கோடி - 11 வீரர்கள்
  • அடிப்படை தொகை ரூ. 1 கோடி - 20 வீரர்கள்
  • அடிப்படை தொகை ரூ. 75 லட்சம்- 9 வீரர்கள்
  • அடிப்படை தொகை ரூ. 50 லட்சம்- 61 வீரர்கள்
  • அடிப்படை தொகை ரூ. 40 லட்சம் - 7 வீரர்கள்
  • அடிப்படை தொகை ரூ. 30 லட்சம் - 4 வீரர்கள்
  • அடிப்படை தொகை ரூ. 20 லட்சம் - 274 வீரர்கள்

அயல்நாட்டு வீரர்கள் என்று எடுத்துக்கொண்டால் அதிகபட்சமாக இங்கிலாந்தில் இருந்து 27 வீரர்கள் ஏலத்தில் பங்கேற்கின்றனர். இதற்கு அடுத்தபடியாக தென் ஆப்பிரிக்காவில் இருந்து 22 வீரர்கள் பங்கேற்கின்றனர். ஆஸ்திரேலியாவில் இருந்து 21 வீரர்களும், வெஸ்ட் இண்டீஸில் இருந்து 20 வீரர்களும் இந்த மினி ஏலத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை