ஐபிஎல் கிரிக்கெட்டில் இறுதிப் போட்டிக்கு முதலில் செல்வது யார் என்று சிஎஸ்கே, குஜராத் அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. குவாலிபையர் முதல் போட்டியில் டாஸ் வென்ற ஹர்திக் பாண்டியா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய சிஎஸ்கே அணி  20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 172 ரன்களை சேர்த்தது.

Advertisement

இதையடுத்து, 173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணியில் சாஹா, சுப்மன் கில் ஜோடி பொறுப்பாக விளையாடி ரன்களை சேர்த்தனர். சாஹா 12 ரன்களில் ஆட்டமிழக்க, பவர்பிளே முடிவதற்குள்ளே தோனி சுழற்பந்துவீச்சாளர்களை பந்து வீச அழைத்தார். இதில் கட்டுக்கோப்பாக பந்துவீசிய தீக்சனா கேப்டன் ஹர்திக் பாண்டியாவை 8 ரன்களில் வெளியேற்றினார். 

Advertisement

இதனையடுத்து, ஜடேஜா கையில் பந்து வந்ததும், அவர் ஆடுகளத்தை சிறப்பாக பயன்படுத்தினார். குறிப்பாக சிஎஸ்கே பவுலர்களுக்கு தண்ணீர் காட்டிய சுப்மன் கில்லுக்கு, ஜடேஜா தக்க பதிலடி தந்தார். குறிப்பாக ஒரு பந்து திரும்பியது மட்டுமல்லாமல், திடீரென்று யாருமே எதிர்பாராத வகையில் எம்பியது. இதனை கொஞ்சம் கூட கணிக்காத சுப்மன் கில் ஷாக் ஆகி நின்றார். 

காணொளியை காண இங்கே க்ளிக் செய்யவும்: டேவிட் மில்லரை சொல்லி வீழ்த்திய ஜடேஜா!

அதன்பின் ஷுப்மன் கில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த, மறுமுனையில் களமிறங்கிய தசுன் ஷனகா ரிவர்ஸ் ஸ்வீப் அடிக்க முயன்று ரவீந்திர ஜடேஜா பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். அதனைத்தொடர்ந்து களமிறங்கிய டேவிட் மில்லரும் அடிக்க முன்று ஜடேஜாவின் பந்துவீச்சை கவணிக்க தவறினார். இதனால் க்ளீன் போல்டாகியதோடு வெறும் 4 ரன்களுக்கு விக்கெட்டை ஆட்டத்தின் முக்கியமான கட்டத்தில் பெவிலியனுக்கு திரும்பினார். இந்நிலையில் ரவீந்திர ஜடேஜா பந்துவீச்சில் டேவிட் மில்லர் ஆட்டமிழந்த காணொளி வைரலாகி வருகிறது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News