ரோஹித் சர்மா கொஞ்சம் பிரேக் எடுக்க வேண்டும்- சுனில் கவாஸ்கர்!

Updated: Sun, May 07 2023 12:22 IST
Ipl 2023: Rohit Should Take A Break For The Time Being, And Keep Himself Fit For The Wtc Final, Says (Image Source: Google)

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ரோஹித் சர்மா பேட்டிங் வந்தபோது சிறப்பாக ஃபீல்டிங் செட் அப் செய்து, தோனி ஸ்டம்ப் அருகே வந்து கீப்பிங் செய்ததால் சற்று அழுத்தம் ஏற்பட்டது. அந்த நேரத்தில் தவறான ஷாட்டை விளையாடிய ரோஹித் சர்மா, ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டம் இழந்தார். கடந்த பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியிலும் டக்அவுட் ஆனார். அடுத்தடுத்து இரண்டு போட்டிகளில் டக் அவுட் ஆனதால் கடும் விமர்சனத்திற்கு உள்ளானதோடு, மோசமான வரலாற்றையும் ஐபிஎல் கிரிக்கெட்டில் படைத்துள்ளார்.

அதாவது, 16 முறை டக் அவுட் ஆகி, ஐபிஎல் கிரிக்கெட்டில் அதிக முறை டக் அவுட் ஆனவர்கள் பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறி உள்ளார். ரோஹித் சர்மாவின் இந்த செயல் கடும் விமர்சனம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் முதல் இரண்டு விக்கெட்டுகள் பறிபோன பிறகு அப்படி ஒரு மோசமான சாட் ஆடியது எதற்காக? கடந்த போட்டியில் டக் அவுட் ஆன பிறகு இந்த போட்டிக்கு வந்திருக்கிறீர்கள். இந்த சமயத்தில் பொறுப்பின்றி இப்படி ஆடியது ஏன்? மேலும், இது உங்களுக்கு மட்டுமல்ல இந்திய அணிக்கும் ஆபத்தானது என்று பல்வேறு கேள்விகளை முன் வைத்து விமர்சித்துள்ளார் சுனில் கவாஸ்கர். 

இதுகுறித்து பேசிய அவர், “ரோஹித் சர்மா இப்படி அடுத்தடுத்து இரண்டு போட்டிகளில் டக் அவுட் ஆனால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னர் அவரிடம் இருக்கும் நம்பிக்கை முற்றிலுமாக குறைந்து விடும் வாய்ப்புகள் உள்ளது. இது அவருக்கு மட்டும் ஆபத்து அல்ல இந்திய அணைக்கும் ஆபத்தானது!. மேலும் கடந்த போட்டியில் டக் அவுட் ஆகிவிட்டு இந்த போட்டிக்கு வந்திருக்கிறீர்கள். சிறிது நேரம் எடுத்துக்கொண்டு ரன் குவிப்பில் ஈடுபடலாம். 

அதுமட்டுமல்லாது இரண்டு விக்கெட்டுகள் பறிபோயிருக்கிறது. அதை கவனத்தில் கொண்டும் விளையாடியிருக்க வேண்டும். ஆனால் அதைப்பற்றி யோசிக்காமல் தவறான ஷார்ட் விளையாடி இப்படி ஆட்டம் இழந்திருக்கிறார். இதை எப்படி எளிதாக எடுத்துக் கொள்ள முடியும்?. ரோஹித் சர்மா சாதாரண வீரர் அல்ல. அணியின் கேப்டன். இவர் ஆட்டம் இழந்தால் அணியினர் மத்தியில் நம்பிக்கை எந்த அளவுக்கு சீர்குலையும் என்பதையும் யோசித்து விளையாடியிருக்க வேண்டும். 

ரோஹித் சர்மா சரியான மனநிலையில் இல்லை என்று தோன்றுகிறது. ஒரு சில போட்டிகள் ஓய்வு எடுக்க வேண்டும். இல்லையெனில் மொத்தமாக ஓய்வெடுத்துக்கொண்டு நேரடியாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் விளையாடுவதற்கு முன்னர் பயிற்சிக்கு வரலாம். மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இவர் மிக முக்கியமான தேவை என்பதால் கடைசி சில முக்கியமான போட்டிகளில் கூட ஆடிக் கொள்ளலாம். தொடர்ச்சியாக தவறுகள் செய்து மன உறுதியை சீர்குலைத்திட வேண்டாம்” என்று தெரிவித்துள்ளார்

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை