ஐபிஎல் 2023: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸை வீழ்த்தி ஆர்சிபி வெற்றி!

Updated: Mon, May 01 2023 23:42 IST
Image Source: Google

16ஆவது ஐபிஎல் சீசனின் 43ஆவது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டி லக்னோவில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பேட்டிங் தேர்வு செய்தது. 

அதன்படி இன்னிங்ஸை தொடங்கிய விராட் கோலி மற்றும் டூ பிளெசிஸ் இணை நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.  சுழற்பந்து வீச்சாளர்களை அதிகம் பயன்படுத்தியது லக்னோ. அதற்கு காரணம் ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு ஒத்துழைத்ததுதான். முதல் விக்கெட்டிற்கு 62 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் விராட் கோலி 30 பந்துகளில் 31 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார்.

பின்னர் வந்த பேட்ஸ்மேன்கள் ரன் சேர்க்க தடுமாறினர்.  அனுஜ் ராவத், மேக்ஸ்வெல், சுயாஷ் பிரபுதேசாய், டூ பிளெசிஸ், மஹிபால் லோம்ரோர் ஆகியோர் சீரான இடைவெளியில் ஆட்டமிழந்தனர். இதில் கேப்டன் டூ பிளெஸ்ஸி, 40 பந்துகளில் 44 ரன்கள் எடுத்திருந்தார். 

தினேஷ் கார்த்திக், 11 பந்துகளில் 16 ரன்கள் எடுத்த நிலையில் நான்-ஸ்ட்ரைக்கர் எண்டில் ரன் அவுட்டாகி வெளியேறினார். கரண் சர்மா, சிராஜ் ஆகியோர் வந்த வேகத்தில் அவுட்டாகி வெளியேறினர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் ஆர்சிபி 9 விக்கெட்கள் இழப்பிற்கு 126 ரன்கள் எடுத்தது. லக்னோ அணி தரப்பில் நவீன்-உல்-ஹக் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். 

இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய லக்னோ அணியின் அதிரடி தொடக்க வீரர் கைல் மேயார்ஸ், முதல் ஓவரின் இரண்டாவது பந்திலேயே ரன்கள் ஏதுமின்றி முகமது சிராஜிடம் விக்கெட்டை இழந்தார். அடுத்து வந்த ஆயூஷ் பதோனி 4 ரன்களிலும், தீபக் ஹூடா ஒரு ரன்னிலு, குர்னால் பாண்டியா 14 ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். 

அதன்பின் அணியின் நம்பிக்கையாக பார்க்கப்பட்ட மார்கஸ் ஸ்டொய்னிஸ் 13 ரன்களிலு, நிகோலஸ் பூர 9 ரன்களிலு, கிருஷணப்பா கவுதம் 2 சிக்சர் ஒரு பவுண்டரி என 23 ரன்களிலும் என விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு திரும்ப ஆர்சிபி அணியின் வெற்றியும் அந்த சமயத்திலேயே உறுதிசெய்யப்பட்டது. 

பின்னர் வந்த வீரர்களாலும் இலக்கை எட்டமுடியாததால், 19.5 ஓவர்கள் முடிவில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 108 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் ஆர்சிபி அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸை வீழ்த்தி முந்தைய தோல்விக்கு பழிதீர்த்தது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை