ஐபிஎல் 2023: சாம், ஷாருக் மிரட்டல் அடி; ராஜஸ்தானுக்கு 188 டார்கெட்!

Updated: Fri, May 19 2023 21:23 IST
Image Source: Google

16ஆவது சீசன் ஐபிஎல் தொடர் தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் முதல் அணியாக 'பிளே-ஆப்' சுற்றுக்கு தகுதி பெற்று இருப்பதுடன் புள்ளி பட்டியலில் முதலிடத்தை உறுதி செய்துள்ளது. டெல்லி கேப்பிட்டல்ஸ், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விட்டன. எஞ்சிய 3 இடத்துக்கு கடும் போட்டி நிலவுகிறது.

அந்தவகையில் இன்று நடைபெறும் 66ஆவது லீக் ஆட்டத்தில் ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்த்து சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி எதிர்கொள்ளவுள்ளது. இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. 

அதன்படி களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணியில் பிரப்சிம்ரன் சிங் 2 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த அதர்வா டைடே 19 ரனகளிலும், ஷிகர் தவான் 17 ரன்களில் ஷிகர் தவானும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். 

இதையடுத்து கடந்த போட்டியில் இறுதிவரை அதிரடி காட்டி அசத்திய லியாம் லிவிங்ஸ்டோன் 9 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் நவ்தீப் சைனி பந்துவீச்சில் க்ளீன் போல்டாகி பெவிலியனுக்கு திருபினார். அதன்பின் இணைந்த ஜித்தேஷ் சர்மா - சாம் கரண் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். 

இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஜித்தேஷ் சர்மா 44 ரன்களுக்கு ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். அவரைத் தொடர்ந்து சாம் கரனுடன் இணைந்த ஷாரூக் கானும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரும் சரசரவென உயர்ந்தது. இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் கிங்ஸ் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 1187 ரன்களைச் சேர்த்தது. 

இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த சாம் கரன் 2 சிக்சர், 4 பவுண்டரி என 49 ரன்களையும், ஷாருக் கான் 2 சிக்சர், 4 பவுண்டரிகள் என 41 ரன்களையும் சேர்த்து அசத்தினர். ராஜஸ்தான் தரப்பில் நவ்தீப் சைனி அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை