Jitesh sharma
வெளிநாட்டு வீரர்கள் இல்லாமல் நாங்கள் சிறப்பாக செயல்பட்டுள்ளோம் - ஜித்தேஷ் சர்மா!
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டியில் ஹைதராபாத்தில் உள்ள ராஜிவ் காந்தி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 214 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக பிரப்ஷிம்ரன் சிங் 71 ரன்களையும், ரைலீ ரூஸோவ் 49 ரன்களையும் சேர்த்தனர்.
இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய சன்ரைசர்ஸ் அணியில் அதிரடி தொடக்க வீரர் டிராவிஸ் ஹெட் ரன்கள் ஏதுமின்றி முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். அதன்பின் இணைந்த அபிஷேக் சர்மா - ராகுல் திரிபாதி இணை அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினர். இதில் ராகுல் திரிபாதி 33 ரன்களுக்கு ஆட்டமிழக்க, மறுபக்கம் அரைசதம் கடந்து 66 ரன்களைச் சேர்த்திருந்த அபிஷேக் சர்மாவும் விக்கெட்டை இழந்தார்.
Related Cricket News on Jitesh sharma
-
ஐபிஎல் 2024: பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனாக ஜித்தேஷ் சர்மா நியமனம்!
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை ஜித்தேஷ் சர்மா வழிநடத்துவார் என அந்த அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2024: ஷஷாங்க் சிங் அதிரடி ஃபினிஷிங்; ஆர்சிபி அணிக்கு 177 ரன்கள் இலக்கு!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி 177 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
IND vs AUS, 4th T20I: ரிங்கு சிங், ஜித்தேஷ் சர்மா அதிரடி; ஆஸிக்கு 175 டார்கெட்!
ஆஸ்திரேலிய அணிக்கெதிரான நான்காவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 175 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ராகுல் டிராவிட் எனக்கு கூறிய அறிவுரை இதுதான் - ஜித்தேஷ் சர்மா!
தான் முதல் முறையாக இந்திய அணிக்கு தேர்வான போது இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தனக்கு ஒரு அறிவுரையை கூறியதாகவும், அது என்ன? என்பது குறித்த தகவலை தற்போது ஜித்தேஷ் சர்மா கூறியுள்ளார். ...
-
ஐபிஎல் 2023: சாம், ஷாருக் மிரட்டல் அடி; ராஜஸ்தானுக்கு 188 டார்கெட்!
ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி 188 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2023: லிவிங்ஸ்டோன், ஜித்தேஷ் காட்டடி; 214 ரன்களை குவித்தது பஞ்சாப் கிங்ஸ்!
மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி 215 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
டி20 தொடரிலிருந்து சஞ்சு சாம்சன் வெளியேறினார்; அறிமுக வீரருக்கு வாய்ப்பு!
இலங்கைக்கு எதிரான டி20 தொடரிலிருந்து சஞ்சு சாம்சன் காயம் காரணமாக விலகியுள்ளதாகவும், அவருக்கு பதிலாக ஜித்தேஷ் சர்மாவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் பிசிசிஐ அறிவித்துள்ளது. ...
-
பந்த், இஷானை விட இவர் தான் சிறந்தவர் - விரேந்திர சேவாக்!
பஞ்சாப் கிங்ஸ் அணியின் ஜித்தேஷ் சர்மாவை இந்திய அணியின் முன்னாள் வீரர் விரேந்திர சேவாக் பாராட்டியுள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24