ஐபிஎல் 16ஆவது சீசனுக்கான மினி ஏலம் கடந்த டிசம்பர் 23ஆம் தேதி கொச்சியில் நடைபெற்றது.இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பென் ஸ்டோக்ஸையும், மும்பை இந்தியன்ஸ் அணி கேமரூன் கிரீனையும் வாங்கியது. இதில் அதிகபட்ச தொகையான ரூ. 18.50 கோடிக்கு இங்கிலாந்து ஆல் ரவுண்டர் சாம் கரனை பஞ்சாப் கிங்ஸ் அணி வாங்கியது.

Advertisement

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பென் ஸ்டோக்ஸை தவிர்த்து அஜிங்கிய ரஹானே என்ற பெரிய வீரரை மட்டும்தான் வாங்கியது. இதனைத் தொடர்ந்து நடைபெற்ற ஐபிஎல் மீட்டிங்கில், போட்டிகள் அனைத்தும் இந்தியாவில் வழக்கம்போல உள்ளூர் மைதானங்களில்தான் போட்டிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

Advertisement

அதாவது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஒரு அணிக்கு எதிராக ஒரு போட்டியை சேப்பாக்கத்திலும், மற்றொரு போட்டியை எதிரணியின் சொந்த மைதானத்திலும் விளையாடும். அதாவது 2019ஆம் ஆண்டில் இருந்த நடைமுறை மீண்டும் அமல்படுத்தப்பட உள்ளது.

இந்நிலையில், 16ஆவது சீசனுக்கான ஐபிஎல் அட்டவணை எப்பது வெளியாகும் என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. இந்த அட்டவணையை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் மட்டும்தான் வெளியிட உள்ளது. சரியாக மாலை 5 மணிக்கு அட்டவணை குறித்த அறிவிப்புகள் வெளியாக ஆரம்பிக்கும். 

சிஎஸ்கே, மும்பை இந்தியன்ஸ், ஆர்சிபி அணிகள் இடையிலான போட்டி சேப்பாக்கத்தில் எப்போது நடைபெறும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து காணப்படுகிறது. கடந்த ஆண்டில் நடைபெற்ற ஐபிஎல் 15ஆவது சீசனில், அறிமுக அணியாக களமிறங்கிய குஜராத் டைடன்ஸ் அணிதான் கோப்பை வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News