பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதிய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆர் சி பி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் நான்கு விக்கெட்டுகள் மட்டுமே இழந்து 174 ரன்கள் அடித்தது. மிகச்சிறப்பாக செயல்பட்ட டு பிளசிஸ் மற்றும் விராட் கோலி ஜோடி 137 ரன்கள் சேர்த்தனர். விராட் கோலி 59 ரன்களுக்கு அவுட் ஆனார். டு பிளசிஸ் 84 ரன்கள் அடித்து ஆட்டம் இழந்தார்.

Advertisement

இந்த இலக்கை துரத்திய பஞ்சாப் கிங்ஸ் அணி 17.2 ஓவர்களில் 150 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பேட்டிங்கில் சற்று நம்பிக்கையை அளித்த பிரப்சிம்ரன் 46 ரன்கள், ஜித்தேஷ் சர்மா 41 ரன்கள் அடித்தனர். மற்ற வீரர்கள் சொற்பரன்களுக்கு வெளியேறியதால், பஞ்சாப் கிங்ஸ் அணி இந்த சரிவை சந்தித்திருக்கிறது. ஆர்சிபி அணிக்கு பந்துவீச்சில் மிரட்டிய சிராஜ் நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றினார். பந்துவீச்சில் நான்கு விக்கெட்டுகள் மற்றும் முக்கியமான நேரத்தில் ஒரு ரன் அவுட் என்று அசத்திய சிராஜ் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

Advertisement

இன்றைய போட்டியில் பாப் டு பிளசிஸ் இம்பேக்ட் வீரராக செயல்பட்டதால் கேப்டன் பொறுப்பேற்று விளையாடிய விராட் கோலி, போட்டி முடிந்த பிறகு பேசுகையில், “புள்ளிப்பட்டியலில் நாங்கள் எங்கே இருக்கிறோம் என்பதை வைத்து அணியை வரையறுக்க முடியாது. ஆட்டம் செல்லசெல்ல 13 அல்லது 14வது போட்டியில் எங்கே இருக்கிறோம் என்பதை பாருங்கள். அதற்கேற்றவாறு தான் எங்களது கவனம் இருக்கும். இன்று டு பிளசிஸ் விளையாடிய விதம் ஆர்சிபி அணி 20-30 ரன்கள் கூடுதலாக அடிப்பதற்கு உதவியது.

இந்த பிட்ச்சில் சற்று பேட்டிங் செய்ய கடினமாகவே இருக்கிறது. ஏனெனில் அடியில் சிறிதளவிலும் ஈரப்பதம் இல்லாமல் வறட்சியாக இருந்ததால், எதிர்பார்த்த அளவிற்கு பந்து வரவில்லை. இரு அணிகளும் சிக்சர் அடிப்பதற்கு மிகவும் சிரமப்பட்டதை பார்க்க முடிந்தது. ஆரம்பத்தில் நான் மற்றும் டு பிளசிஸ் இருவரும் இணைந்து ஆட்டத்தை கடைசி வரை எடுத்துச்சென்று 190 ரன்கள் டார்கெட் வைத்தால் எளிதாக வெற்றி பெறலாம் என்று முடிவு செய்தோம். இருப்பினும் போட்டி செல்லசெல்ல 170 ரன்கள் என்பதே நல்ல இலக்கு என்பது தெரிந்து விட்டது.

இதனால் பந்துவீச்சாளர்களிடம் இந்த இலக்கு நமக்கு போதுமானது. ஆகையால் ஆட்டத்தை கடைசி வரை எடுத்துச்செல்ல விடாமல் 6-7 விக்கெட்டுகள் விரைவாக வீழ்த்திவிட்டால் நாம் முன்னிலையில் இருக்கலாம் என்று பேசினேன். பவர்-பிளே ஓவர்களில் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர். எங்களது பந்துவீச்சாளர்கள் மிகச் சிறப்பாக செயல்பட்டு கொடுத்தனர். பேட்டிங்கில் எந்த அளவிற்கு ஆழம் இருக்கின்றதோ, அந்த அளவிற்கு பவுலிங்கில் எங்களிடம் ஆழம் இருக்கிறது. பல்வேறு விதமான பவுலர்கள் இருக்கின்றனர்” என்று தெரிவித்துள்ளார். 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News