ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற 69ஆவது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஹைதராபாத்தில் உள்ள ராஜிவ் காந்தி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய அந்த அணிக்கு பிரப்ஷிம்ரன் சிங் - அதர்வா டைடே இணை தொடக்கம் கொடுத்தனர். 

Advertisement

இவரும் இணைந்து அதிரடியாக விளையாடியதுடன், முதல் விக்கெட்டிற்கு 97 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினர். அதன்பின் 46 ரன்கள் சேர்த்த நிலையில் அதர்வா டைடே விக்கெட்டை இழக்க, மறுபக்கம் அரைசதம் கடந்திருந்த பிரப்ஷிம்ரன் சிங் 71 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய ஷஷாங்க் சிங்கும் 2 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். 

Advertisement

அதேசமயம் மறுபக்கம் அதிரடியாக விளையாடி வந்த ரைலீ ரூஸோவ் 49 ரன்கள் எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை நூழிலையில் தவறவிட்டார். அதன்பின் இறுதியில் கேப்டன் ஜித்தேஷ் சர்மா அதிரடியாக விளையாடிய 32 ரன்களைச் சேர்த்து அணிக்கு ஃபினிஷிங்கைக் கொடுத்தார். இதன்மூலம் பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 215 ரன்களைச் சேர்த்தது. 

 

இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய ஹைதராபாத் அணிக்கு டிராவிஸ் ஹெட் - அபிஷேக் சர்மா இணை தொடக்கம் கொடுத்தனர். பஞ்சாப் கிங்ஸ் அணி தரப்பில் அர்ஷ்தீப் சிங் முதல் ஓவரை வீசினார். அந்த ஓவரின் முதல் பந்தை எதிர்கொண்ட டிராவிஸ் ஹெட் சரியாக கணிக்க தவற முதல் பந்திலேயே க்ளீன் போல்டாகி பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். இந்நிலையில் இக்காணொளியானது இணையத்தில் வைரலாகி வருகிறது.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News